மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்

    மும்பை: ஹெச்டிஎப்சி வங்கியின் பாஸ்புக் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வாடிக்கையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆனால், இது பயப்பட தேவையில்லாத விஷயம் என வங்கி சார்பில் இப்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மிகப் பெரிய தனியார் துறை வங்கி எச்.டி.எஃப்.சி. இந்த வங்கியின் பாஸ் புத்தகத்தில், ரப்பர் ஸ்டாம்பிடப்பட்ட ஒரு வாசகம் மின்னியது. அதில், இந்த வங்கியின் டெபாசிட்டுகள் அனைத்தும் Deposit Insurance and Credit Guarantee Corporation நிறுவனத்தின் இன்சூரன்சில் உள்ளன. வங்கியில் ஏதேனும் நிதிச்சிக்கல் ஏற்பட்டால், அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் DICGC நிறுவனம்தான் காப்பீட்டுத்தொகை வழங்கும். நிதிச்சிக்கல் ஏற்பட்டதிலிருந்து 2 மாத காலத்துக்குள் ஒவ்வொரு டெபாசிட்தாரர்களுக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    HDFC Bank clarifies over passbook with deposit insurance stamp

    இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வைரலாகி வருவதால் வங்கியின் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா பஞ்சாப் கூட்டுறவு வங்கி (பிஎம்சி) நிதிச் சிக்கலில் சிக்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமே ரூ.1000 மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. இதனால், வங்கியிலுள்ள தனது அக்கவுண்டிலிருந்து பணம் எடுத்து குழந்தை ஸ்கூல் பீஸ் கட்ட முடியாத சோகத்தில், ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

    இப்படியான செய்திகளுக்கு மத்தியில், இப்படி ஒரு பாஸ்புக் சமூக வலைத்தளத்தில் சுற்றியதால், வாடிக்கையாளர்களுக்கு கலக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான், ஹெச்டிஎப்சி வங்கி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

    அந்த விளக்கத்தில், ரிசர்வ் வங்கி ஜூலை 22, 2017 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையில், அனைத்து வங்கிகளும், நிதி வழங்கும் அமைப்புகளும், வாடிக்கையாளர் பாஸ்புக்கில், டெபாசிட்டுக்கான இன்சூரன்ஸ் தொகை குறித்த தகவலை வாடிக்கையாளர் அறியும் வகையில் பதிவு செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. DICGIC விதிகளின் கீழ் அனைத்து வங்கிகளுக்கும் இது, பொருந்தும். பிரிண்ட் தகவல் செய்யாத பாஸ்புக்கில், முத்திரைகுத்தி, இந்த விவரங்களை வழங்குகிறோம். இதில் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு ஹெச்டிஎப்சி வங்கி தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

    English summary
    An image of an HDFC Bank passbook carrying a stamp stating on the Rs 1 lakh limit has gone viral, bank clarifies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X