மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணாடிக்குள் இருக்கிறாள்.. அவளை அணைக்க கூட முடியவில்லை.. மும்பை பெண்ணின் கண்ணீர் கொரோனா கதை!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து மிக உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

கொரோனா காரணமாக இந்தியாவில் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது மகாராஷ்டிராதான். அங்குதான் மும்பை, புனே தொடங்கி மாநிலம் முழுக்க மிக மோசமாக கொரோனா பரவி இருக்கிறது.

மகாராஷ்டிராவில் மட்டும் 72,300 கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. அங்கு 38,502 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மொத்தம் 31,333 பேர் குணமடைந்து உள்ளனர். 2,465 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 42,216 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.1,368 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.

டெல்லியில் இருந்து ஊட்டி வந்தார்.. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி ஆ ராசாடெல்லியில் இருந்து ஊட்டி வந்தார்.. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி ஆ ராசா

அலிஃபியா ஜவேரி போஸ்ட்

அலிஃபியா ஜவேரி போஸ்ட்

இந்த நிலையில் மும்பையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பெண் அலிஃபியா ஜவேரி தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து மிக உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். ஹுமன்ஸ் ஆப் பாம்பே பேஸ்புக் பக்கத்தில் அலிஃபியா இது குறித்து எழுதி உள்ளார். அலிஃபியா தனது போஸ்டில், எனக்கு மருத்துவர்கள் கடந்த வாரம் கொரோனா இருப்பதாக கூறினார்கள். எனக்கு லேசான அறிகுறிகள் வந்தது. அதனால் என்னை தனிமையில் இருக்க சொன்னார்கள்.

கொரோனா பாதிப்பு

என்னிடம் மருத்துவர்கள் அப்படி சொன்னதும் எனக்கு வந்த முதல் கேள்வி, என் மகளை என்ன செய்வது ? அவளுக்கு கொரோனா இருக்குமா என்பதுதான். என் மகளுக்கு வயது 17 மாதம்தான் ஆகிறது. கடவுள் புண்ணியத்தில் என் மகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால் நான் அடுத்த மூன்று வாரங்களுக்கு என் மகளுடன் இருக்க முடியாது. எனக்கு லேசான கொரோனா பாதிப்பு என்பதால் வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார்கள்.

வீட்டிலேயே சிகிச்சை

வீட்டிலேயே சிகிச்சை

வீட்டிலேயே சிகிச்சை எடுக்க சொல்லிவிட்டனர். இது ஒரு வகையில் நல்லது. ஆனால் வீட்டில் என் மகளை நெருங்க முடியாமல் பெரும் கஷ்டத்தில் நான் இருக்கிறேன். தினமும் அவள் என் அறை இருக்கும் கண்ணாடிக்கு அருகே வந்து தனது விரல்களை வைப்பாள். நான் அந்த கண்ணாடியில் விரலை வைக்கும் வரை அவள் கண்ணாடியில் விரலை வைப்பாள். அப்போது எல்லாம் எனக்கு அவளை கட்டி அணைக்க வேண்டும் என்று இருக்கும்.

மாஸ்க் கட்டளை

மாஸ்க் கட்டளை

ஆனால் அவளை என்னால் தொட முடியாது. அவள் இப்போதுதான் பேச தொடங்கி இருக்கிறாள். ஆனால் இப்போதே, அவள் என் கைகளை கழுவும்படி ஆணையிடுகிறாள். உடைந்த இந்தியில் என் கணவரிடம் மாஸ்க் அணிய கூறுகிறாள். இரவில் என்னுடன் உறங்க விரும்பி அடிக்கடி எழுந்து அழுகிறாள். அவளின் கண்ணீரை பார்க்கும் போது எனக்கு மிக கஷ்டமாக இருக்கிறது.

என் கணவர் என் தங்கை

என் கணவர் என் தங்கை

என் கணவரும், என் தங்கையும்தான் அவளை கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் அதிகாலை அவள் எழுந்து கண்ணீர் விடுவதை பார்க்கக் மிகவும் வேதனையாக இருக்கிறது. கண்ணாடிக்குள் இருக்கும் அவளை தொட முடியாமல் உடைந்து போய் இருக்கிறேன். அவளை விரைவில் கட்டி அணைப்பேன் என்று நம்பிக்கை மட்டுமே என்னை உயிர்ப்போடு வைத்து இருகிறது. அவளை உறங்க வைக்க., தூக்கி சுற்ற காத்துக் கொண்டு இருக்கிறேன், என்று அலிஃபியா தனது போஸ்டில் உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Heart Warming story of a young mother affected with Coronavirus in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X