மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் கனமழை: உத்தவ் தாக்கரே, நவாப் மாலிக் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சின் மூத்த தலைவரான நவாப் மாலிக் ஆகியோர் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகள், குடியிருப்புகள், தண்டவாளங்கள் என வெள்ளம் சூழ்ந்து காட்சி அளிக்கின்றன.

கலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்!கலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்!

கடலோர படைகள்

கடலோர படைகள்

5-ஆவது நாளாக நேற்றும் மழை நீடித்தது. இதனால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் கடலோர படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முட்டி அளவு நீர்

முட்டி அளவு நீர்

கடந்த 20 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியின் அதிகாரத்தை கொண்டுள்ள சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்தமான மாதோஸ்ரீ இல்லத்தை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாந்த்ரா, காலாநகர் காலனி பகுதியில் உள்ள இந்த இல்லத்தின் வெளியே முட்டி அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

புறநகர் பகுதி

புறநகர் பகுதி

சிவசேனை கட்சியின் அலட்சியம்தான் இந்த வெள்ளம் சூழும் நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான நவாப் மாலிக்கின் வீடு மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள குர்லா எல்பிஎஸ் மார்க் பகுதியில் உள்ளது.

புகைப்படம்

இந்த பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக அவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. முழங்கால் அளவுக்கான தண்ணீரில் நின்று கொண்டு நவாப் மாலிக் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மும்பையில் மாநில அரசு செயல்படுத்தி வரும் மெட்ரோ ரயில் திட்டங்களால்தான் இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

English summary
Heavy rain in Mumbai results water logged in Uddhav Thackkeray and Nawab Malik's house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X