மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா: சட்டசபை தேர்தல் முடிவுகள் முதல்.. புதிய ஆட்சி அமைந்தது வரை நடந்த தகிடுதத்தங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு திடீரென பாஜக- என்சிபியின் அஜித் பவார் கூட்டணி பதவியேற்றது. இந்த அடுத்தடுத்த திருப்பங்களை கடந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைந்தது எப்படி?

    மகாராஷ்டிராவில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் 24-ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும், என்சிபி 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    இத்தனை நாட்களாக மகாராஷ்டிராவில் நடந்து வந்த அரசியல் நெருக்கடிக்கு இன்று முடிவு எட்டியது. இது கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.

    காங்கிரஸுக்கு பெப்பே.. சிவசேனாவுக்கு டிமிக்கி.. அலேக்காக தேசியவாத காங்.கை உடைத்த பாஜக.. செம டிவிஸ்ட்காங்கிரஸுக்கு பெப்பே.. சிவசேனாவுக்கு டிமிக்கி.. அலேக்காக தேசியவாத காங்.கை உடைத்த பாஜக.. செம டிவிஸ்ட்

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா

    அக்டோபர் 21- மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல்

    அக். 24- மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக- சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்றது. பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை. ஆனால் இந்த கூட்டணி 161 இடங்களை பெற்றன.

    அக். 26- முதல்வர் பதவியில் முதல் இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவுக்கு கொடுத்தால் மட்டுமே ஆதரவு என சிவசேனா திடீரென போர்க்கொடி உயர்த்தியது.

    அக். 27: சிவசேனாவுடன் அதிகாரத்தை சமமாக பிரித்து கொள்வோம் என கூறியிருந்தோம். ஆனால் அது முதல்வர் பதவியில் அல்ல என தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.

    சிவசேனா எதிர்ப்பு

    சிவசேனா எதிர்ப்பு

    அக் 29- பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் மங்கலான தீபாவளியை மக்கள் கொண்டாடினர் என சாம்னா நாளேட்டில் சிவசேனா கட்டுரை தீட்டியது.

    நவம்பர் 2: மகாராஷ்டிராவில் புதிய அரசு உருவாகும் என்றும் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராவார் என்றும் சிவசேனா தெரிவித்தது.

    நவ.5- அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார் பட்னவீஸ். அப்போது சிவசேனாவின் கோரிக்கைகளை ஏற்க அமித்ஷா மறுத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    நவ.6- தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த என்சிபி தலைவர் சரத்பவாரை சந்தித்தார் சிவசேனாவின் சஞ்சய் ராவத்.

    பட்னவீஸ் எதிர்ப்பு

    பட்னவீஸ் எதிர்ப்பு

    நவ.8- பிரதமருக்கு எதிராக உத்தவ் தாக்கரே ஏற்கமுடியாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக உத்தவ் தாக்கரே குறித்து பட்னவீஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    நவ.9- பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைத்தார். மேலும் ஆட்சி அமைக்க 72 மணிநேரம் அவகாசம் கொடுத்தார்.

    நவ.10- பாஜக ஆட்சி அமைக்க முடியாது என கூறியதை அடுத்து திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆட்சி அமைக்க உரிமை கோருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் அழைத்தார்.

    நவ.11- 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினார் சேனா எம்பி அரவிந்த் சாவந்த்

    சிவசேனா கட்சி

    சிவசேனா கட்சி

    நவ.12- மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

    நவ.17- என்டிஏவிலிருந்து மொத்தமாக சிவசேனா கட்சி வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது

    நவ.19- மோடியை காப்பாற்றியதே பால்தாக்கரேதான். அதை மறக்க வேண்டாம் என சிவசேனா விமர்சனம்

    நவ. 20- விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சரத்பவார் சந்திப்பு

    சேனா எதிர்ப்பு

    சேனா எதிர்ப்பு

    நவ.21- சுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கு தயார் இல்லை என சிவசேனா கருத்து

    நவ-22- சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரத்தில் விரைவில் புதிய ஆட்சி அமையும் என என்சிபி தலைவர் சரத்பவார் கருத்து

    நவ.23- பாஜக- என்சிபியின் அஜித் பவார் தலைமையிலான எம்எல்ஏக்கள் இணைந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்தனர். அதில் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவீஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இது என்சிபியின் முடிவல்ல என சரத்பவார் விளக்கமளித்துள்ளனர்.

    English summary
    Here is the timeline of Maharastra political crisis starting from elections till new government formed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X