முதலிரவு.. ஆசையாய் நெருங்கிய மாப்பிள்ளை.. கூலாக "அதை" சொன்ன பெண்.. ராத்திரியெல்லாம் கதறி.. ட்விஸ்ட்
மும்பை: முதலிரவு முடிந்த பிறகு பார்த்தால், கல்யாண பெண்ணை காணோம்.. இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
முதலிரவில் எத்தனையோ வினோதமான மற்றும் பகீர் சம்பவங்கள் நடந்துள்ளன.. இதற்கு நம் தமிழகத்திலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன.
காரைக்குடியில் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடந்தது.. கல்யாணத்துக்கு போட்ட நகைகள் குறித்து தம்பதி இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.. அது விவாதமாகி சண்டையாகி விட்டது..
போலீஸ் ஸ்டேஷனுக்கு பெயில் கேட்டு வந்த பெண்.. சட்டையை கழற்றிய அதிகாரி.. ஆபீஸ் ரூமில் நடந்தது என்ன?

பாத்ரூமில் மனைவி
இதில், ஆத்திரமடைந்த கணவர், மனைவியை பாத்ரூமில் தள்ளிவிட்டு தலைமுடியை வெட்டிவிட்டார்.. வாயில் தூக்க மாத்திரையையும் திணித்துவிட்டார்.. இதற்கு பிறகு கல்யாண பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்கள். அதேபோல, முதலிரவில் தன்னை ஆபாச வீடியோ எடுத்ததாக இளம்பெண் ஒருவர் கணவன் மீது நாகர்கோவில் மகளிர் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளிக்க போய், அதில் அந்த மாப்பிள்ளையின் குடும்பமே சிக்கிய சம்பவம் நடந்தது..

விருதுநகர்
விருதுநகரில் கடந்த 2019, நவம்பரில் நடந்த நிகழ்வும் அப்டிபத்தான்.. ஆனால், அந்த தம்பதிக்கு முதலிரவே நடக்கவில்லை.. இப்படியே 6 மாதம் போய்விட்டது.. இதை பற்றி பெண் வீட்டார் மருமகன் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு மாப்பிள்ளை கூறிய பதில் அவர்களை தூக்கி வாரிப்போட்டுள்ளது.. வருஷக்கணக்கில் முதலிரவு நடக்காதவர்கள் இருக்கிறார்கள்.. அதுக்குள்ள என்ன அவசரம்? என் அப்பாவுக்காகத்தான் உன்னை கல்யாணம் செய்தேன்.. வேண்டுமென்றால் அவருடன் ஜாலியா இருந்துக்கோ.. என்னை தொந்தரவு செய்யாதே என்று கூலாக சொன்னார்.. அவ்வளவுதான், அந்த பெண் அடுத்த செகண்டில் மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுக்க போய்விட்டார்..

மலாடு பகுதி
இப்படி எத்தனையா முதலிரவு சம்பவங்கள் நம்மை நிலைகுலைய வைத்தாலும், மும்பையில் தற்போது நடந்துள்ள சம்பவம் அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது.. மும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் அந்த நபர்.. அவர் ஒரு தொழிலதிபர்.. இவரது மகனுக்கு சற்று மனநலம் சரியில்லை.. இவர் ஒரு மாற்று திறனாளியும்கூட.. 28 வயதாகிறது.

மாற்று திறனாளி
அதனால், மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்ணை தேடினார்.. ஆனால் மகன் மாற்றுத்திறனாளியாக இருந்ததால், பெண் அவ்வளவ சீக்கிரம் கிடைக்கவில்லை... யார் யாரிடமோ சொல்லி வைத்து, கடைசியில் ஒரு பெண் கிடைத்தார்.. அவர் பெயர் ஆஷா.. மகனை பற்றி எல்லா விஷயங்களையும் அறிந்த ஆஷா, அவரையே திருமணம் செய்யவிருப்பதாக சம்மதம் சொன்னார்.

ஆண்ட்டி
இதற்கு காரணம், தானும் ஒரு ஆதரவற்ற பெண் என்பதாலும், அம்மா, அப்பா இல்லாத தனக்கு மனிஷா என்ற ஆண்ட்டி ஒருவர் மட்டுமே இருப்பதாகவும் ஆஷா சொன்னார்.. இதைக் கேட்டதும் பூரித்து போன தொழிலதிபர், வரப்போகும் மருமகளுக்கு ஏராளமான பணத்தை வாரி வழங்கினார்.. கல்யாணத்துக்கு தேவையான நகைகளும் தானே மருமகளுக்கு போட்டு அழகு பார்த்தார்.. திருமணத்தையும் தடபுடலாக நடத்தி வைத்தார்.

முதலிரவு
முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. மணமகனும் ஆவலுடன் காத்திருந்தார்.. ஆஷா உள்ளே நுழைந்தார்.. மாப்பிள்ளையிடம் ஏதோ பேசினார்.. அதோட அவ்வளவுதான்.. விடிகாலையில் பார்த்தால் ஆஷாவை காணோம்.. ஆஷா மட்டுமல்ல, தொழிலதிபர் ஆசை ஆசையாய் போட்ட நகைகளையும் காணோம்.. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் ஆஷாவை தேடினர்.. ஆனால், மாப்பிளைளை மட்டும் பதறாமல் இருந்தார்.

முதலிரவில் அதிர்ச்சி
அப்போது அவரிடம் விசாரித்தனர்.. முதலிரவில் நுழைந்ததுமே மாப்பிள்ளையிடம் ஆஷா சொன்னாராம்.. ஏற்கனவே தான் கற்பிழந்துவிட்டதாகவும், தனக்கு கல்யாணமாகிவிட்டது, ஒரு குழந்தைகூட இருக்கிறது.. என்றாராம்... இதைக்கேட்டு அதிர்ந்து போன தொழிலதிபர், மலாடு போலீசில் உடனடியாக புகார் அளித்தார்... அந்த புகாரில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ஆஷா, புரோக்கர் தரகர் கம்லேஷ் ஆகியோர் தன்னை மோசடி செய்துவிட்டதாகவும், இதுக்கெல்லாம் காரணம், அந்த ஆண்ட்டி மனிஷா தான் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷாவையும், ஆண்ட்டியையும் வலைவீசி தேடிவருகின்றனர்.