மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

16 பேர் உடல் சிதறி பலி.. நக்சல் போட்ட அதிர வைக்கும் பிளான்.. கமாண்டோ படை சிக்கியது இப்படித்தான்

கட்சிரோலியில் நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: கட்சிரோலியில் நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

இன்று பீகாரில் பேசிய பிரதமர் மோடி முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டார். இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் தீவிரவாத தாக்குதலே நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி நடத்தி இருந்தால் இந்தியா இலங்கை போல மாறி இருக்கும் என்றார்.

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்தான் காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த நிலையில் இன்று மகாராஷ்டிராவில் தற்போது நக்சல்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளனர்.

என்ன

என்ன

கட்சிரோலியில் எல்லை பகுதியில் அரசு சார்பாக சாலை போடும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இங்கு இருக்கும் பாறைகளை அகற்றுவதற்காக 4 புல்டோசர்கள் அங்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக அங்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த புல்டோசர்கள் இன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. நான்கு புல்டோஸரில் ஒன்று இதனால் வெடித்து சிதறியது.

கட்சிரோலி நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்..உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் கட்சிரோலி நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்..உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம்

நக்சல்தான்

நக்சல்தான்

இந்த தகவல் உடனடியாக கட்சிரோலி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இது நக்சல் ஸ்டைல் தாக்குதல் போல இருந்ததால் Quick Response Team போலீஸ் அனுப்பப்பட்டது. இது நக்சல் எதிர்ப்பு கமாண்டோ படையாகும். எங்காவது நக்சல் தாக்குதல் நடந்தால் உடனடியாக இந்த Quick Response Team படை அந்த பகுதிக்கு செல்லும். இதனால் அந்த படை சாலை போடும் பகுதிக்கு விரைந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அவர்கள் செல்லும் வழியில், சாலையில் பல இடங்களில் கன்னி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது . ஐஇடி வகை குண்டுகள் ஆகும் இது. ஐஇடி என்பது Improvised explosive device வகை குண்டுகள் ஆகும். மிகவும் சிறிதாக இருக்கும் இந்த குண்டுகள் அதிக சக்தி வாய்ந்தது. பொதுவாக இதை புதைத்து வைத்து வெடிக்க வைப்பார்கள். சாலையில்தான் இது அதிகம் புதைத்து வைக்கப்படும்.

வெடிக்க வைத்தனர்

வெடிக்க வைத்தனர்

இந்த வெடிகுண்டு, Quick Response Team செல்லும் பாதையில் வைக்கப்பட்டுள்ளது. சரியாக அவர்கள் சென்ற ஜீப் இதில் ஏறி வெடித்து சிதறி இருக்கிறது. இதில் அந்த சாலையில் 5 அடி பெரிய பள்ளம் விழுந்துள்ளது. பல கமாண்டோ அதிகாரிகள் உடல் சிதறி பலியானார்கள். சம்பவ இடத்திலேயே 11 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள்.

தாக்கினார்கள்

தாக்கினார்கள்

அதே இடத்தில் பதுங்கி இருந்த நக்சல் படை வேகமாக வெளியே வந்து மீதம் இருந்த கமாண்டோ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 5 கமாண்டோ படையினர் வரை பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தற்போது போலீசார் அங்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

English summary
This is How Naxal planned and executed a bloody attack in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X