• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அப்பா".. விண்ணை முட்டும் பழங்குடியினரின் அழுகை.. கண்ணீரும் ஆதங்கமுமாய் பிரிந்த ஸ்டேன் சுவாமி உயிர்!

Google Oneindia Tamil News

மும்பை: மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, மும்பை சிறையிலேயே மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Who Is Stan Swamy? | அப்பா.. விண்ணை முட்டும் பழங்குடியினரின் அழுகை | Oneindia Tamil

  யார் இந்த ஸ்டேன் சுவாமி?

  ஸ்டேன் ஸ்வாமி.. 83 வயதாகிறது.. இவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார்... நம்ம திருச்சியை சேர்ந்தவர்.. வசதியான குடும்பம்.. ஃபிலிப்பைன்ஸில் சமூகவியல் மேல் படிப்பை முடித்தார்.. அங்கு ஆளும் நிர்வாகத்துக்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தார்... அதன்பிறகு இந்தியா திரும்பி பல்வேறு பணிகளை மேற்கொண்டார்..!!

  எல்கர் பரிஷத் வழக்கில்.. கைது செய்யப்பட்ட.. சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி காலமானார்எல்கர் பரிஷத் வழக்கில்.. கைது செய்யப்பட்ட.. சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி காலமானார்

  கேள்வி

  கேள்வி

  1975 முதல் 1986-ம் ஆண்டுவரை பெங்களூரில் உள்ள இந்திய சமூகவியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். பழங்குடியின ஆலோசனை கவுன்சிலை அமைக்க அரசியலமைப்பின் 5வது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்படுத்தாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

  காடுகள்

  காடுகள்

  இதன் பிறகுதான் ஜார்க்கண்ட்டை நோக்கி பயணமானார்.. அங்கு பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.. அதுவும் தொலைதூர காடுகளில் இவர்கள் வாழ்வதால், இவர்களுக்கான உரிமைகள் என்பது கேள்விக்குறியாக இருந்தது.. அதனால், அங்கேயே போய் தங்கினார்.. அந்த மக்களின் நில உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். மற்றொரு புறம் இறை பணியையும் மேற்கொண்டார்...

  அப்பா

  அப்பா

  இவரை பழங்குடி மக்கள் எல்லாரும் "அப்பா" என்றுதான் கூப்பிடுவார்களாம்.. ஆதிவாசி சமூகத்தின் விடிவெள்ளி என்றுகூட இவரை சொல்லலாம். அந்த இன மக்களின் நிலம், காடு தொழிலாளர் உரிமைகள், ஊதியம் தொடர்பாக கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக போராடி உள்ளார்.. பலரின் உரிமைகளையும் பெற்று தந்துள்ளார்...

  கலவரம்

  கலவரம்

  இந்நிலையில், ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி பீமா கோரேகானில் 2018-ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.. அப்போது திடீரென ஒரு மிகப்பெரிய கலவரமும் வன்முறையும் வெடித்தது.. இதில் ஒருவர் இறந்துவிட்டார்.. இந்த வன்முறையை தூண்டியதாக சொல்லி, ஸ்டேன் சுவாமியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த வருடம் கைது செய்தனர்... இதை பார்த்து மனித உரிமை ஆர்வலர்களே அதிர்ந்து போனார்கள்.. காரணம், இந்தியாவிலேயே மிக அதிக வயதுடைய சமூக செயல்பாட்டாளர் கைதானது இதுதான் முதல்முறை.

  மறுப்பு

  மறுப்பு

  தன் மீதான குற்றச்சாட்டை பல வழிகளில் ஸ்டேன் ஸ்வாமி மறுத்தார்... "எனக்கு யாருடனும் தொடர்பு இல்லை.. பல இளம் ஆதிவாசிகள் மற்றும் பூர்வகுடி மக்களை, என்.ஐ.ஏ விசாரணை முகமையானது நக்சல்கள் என்று முத்திரை குத்திவிட்டது.. தேவையில்லாமல் அவர்களை கைது செய்கிறார்கள்.. அதனால்தான், என்னை ஜெயிலில் அடைத்துள்ளனர்.. ஏழை அப்பாவி ஆதிவாசிகளுக்கும், தலித்துகளுக்கும் நீதி வழங்குவதற்கான நீதித்துறையின் நடவடிக்கையையும் நிறுத்துவதும்தான் அதன் வழியாக உள்ளது" என்று ஸ்வாமி அழுத்தம் திருத்தமாக தன்தரப்பு விளக்கம் தந்திருந்தார்.

  என்ஐஏ

  என்ஐஏ

  ஆனாலும் என்ஐஏ இதை நம்பவே இல்லை.. எப்போதெல்லாம் ஸ்டேன் சுவாமி ஜாமீன் கேட்கிறாரோ, அப்போதெல்லாம் ஏஎன்ஐ கடுமையாக மறுப்பு தெரிவித்து ஆட்சேபித்தது.. இறுதிவரை மும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.. அந்த ஜெயிலில் அவருக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.. ஒருகட்டத்தில் அவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனது.

  நோய்

  நோய்

  சாப்பாடு சாப்பிட்டால் உணவை மெல்லவும் முடியாதாம், விழுங்கவும் முடியாதாம்.. இதற்கு பெயர் பார்கின்சன் நோய் என்கிறார்கள்.. இதைதவிர வேறு சில உடல்உபாதைகளும் ஸ்டேனுக்கு ஏற்பட்டுள்ளது.. என்னால் சாப்பிட முடியவில்லை.. ஒரு ஸ்ட்டிரா கொடுக்க முடியுமா? சாப்பாட்டை உறிஞ்சியே சாப்பிடுறேன் என்றாராம்.. 4வாரம் இழுத்தடித்துவிட்டு, இந்த கோரிக்கையை ஜெயில் நிர்வாகம் நிராகரித்துவிட்டது.

  கண்டனம்

  கண்டனம்

  அவ்வளவு ஏன், இவருக்காக நம் தமிழ்நாட்டில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முதல், திராவிடர் கழக வீரமணி, சீமான் வரை ஆதரவாக பேசினார்கள்.. ஸ்டேன் சுவாமி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இவர்கள் எல்லாரும்கூட வலியுறுத்தினார்கள்.. எதையுமே ஏஎன்ஐ காதில் போட்டுக் கொள்ளவில்லை.

  கோர்ட்

  கோர்ட்

  உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் உடம்பு மோசமாகிவிடவும், இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது.. ஸ்டேன் ஸ்வாமியின் பரிசோதிக்க ஒரு டீம் அமைத்து கோர்ட் உத்தரவிட்டது.. அப்போதுதான் தெரிந்தது, அவருக்கு 2 காதுகளிலும் கேட்கும் சக்தியே போய்விட்டிருந்தது.. உடல், கால்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.. உடல் பலவீனமாகி உள்ளது..

  மறுப்பு

  மறுப்பு

  இதற்கு சிகிச்சை எடுக்க அறிவுறுத்தியும் ஸ்டேன் மறுத்துவிட்டார்.. "நான் சீக்கிரமாக இறந்துவிடுவேன்.. அதனால் சிகிச்சைக்கு பதில் என் நண்பர்களுடன் ராஞ்சியில் இருக்கிறேன் என்று அனுமதி கேட்டும் கோர்ட் தரவில்லை. இறுதியில் கொரோனா தொற்றும் சேர்த்து இவரை வாட்டி எடுத்தது.

  கதறல்

  கதறல்

  உரிய மருத்துவ சிகிச்சை கடைசிவரை அவருக்கு கிடைக்கவில்லை.. தான் ஆசைப்பட்டமாதிரி நண்பர்களுடனும் இருக்க முடியவில்லை.. இறுதியில் ஜெயிலுக்குள்ளேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. இவரது மறைவினால் ஜார்க்கண்ட் மாநிலமே அதிர்ந்து போயுள்ளது.. அப்பா என்று பழங்குடி மக்களின் கதறல் விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது..!

  English summary
  Human Rights Activist Father Stan Swamy and Who is he
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X