மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவுக்கு புதிய சோதனை.. திடீரென 200 கேரளா செவிலியர்கள் ராஜினாமா- பணிச்சுமை காரணமாம்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த கேரளாவை சேர்ந்த 200 செவிலியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த மாநிலம் சென்றிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர் செவிலியர்கள்.

3 நாள் சாப்பிட்டால் கொரோனா வராதுன்னு சொன்னாலும் சொன்னாங்க.. அந்த ஹோமியோபதி மருந்துக்கு செம டிமாண்ட் 3 நாள் சாப்பிட்டால் கொரோனா வராதுன்னு சொன்னாலும் சொன்னாங்க.. அந்த ஹோமியோபதி மருந்துக்கு செம டிமாண்ட்

மேற்கு வங்கம்- வடகிழக்கு செவிலியர்கள்

மேற்கு வங்கம்- வடகிழக்கு செவிலியர்கள்

ஆனால் வடகிழக்கு மாநில செவிலியர்கள் இனப் பாகுபாடுடன் நடத்தப்படுவது மேற்கு வங்கத்தில் அதிகரித்தது. இந்த கொடுமைக்கு முடிவுகட்டும் வகையில் 600க்கும் அதிகமான வடகிழக்கு மாநில செவிலியர்கள் பணிகளை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினர். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவுக்கு குழு

மகாராஷ்டிராவுக்கு குழு

தற்போது மகாராஷ்டிரா மாநிலமும் இதேபோல் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராதான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகம். மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த கேரளாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் தேவை என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இதனடிப்படையில் 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செவிலியர்கள் ராஜினாமா

செவிலியர்கள் ராஜினாமா

இன்னொரு புறம் புனே, மும்பை மாநகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த செவிலியர்கள் 200க்கும் அதிகமானோர் தங்களது பணிகளை ராஜினாமா செய்துவிட்டனர். இவர்கள் அனைவருமே கேரளாவுக்கு திரும்பிவிட்டனர். இதனால் புனே, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன.

Recommended Video

    கொரோனா உயிரிழப்பு... அமெரிக்காவில் 1 லட்சத்தை தாண்டியது
    பணிசுமை முக்கிய காரணம்

    பணிசுமை முக்கிய காரணம்

    கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே செவிலியர்களுக்கான பணிச்சுமை மிக அதிகரித்துவிட்டது. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து மருத்துவமனைகளிலேயே தங்கி பணிபுரிய வேண்டிய நெருக்கடிக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அத்துடன் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் கொரோனாவின் பிடியில் இருந்தும் பணிச்சுமையில் இருந்தும் விடுபட தங்களது சொந்த மாநிலமான கேரளாவுக்கே செவிலியர்கள் திரும்பிவிட்டனர். இந்த இக்கட்டான நிலைமையை எதிர்கொள்வது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    English summary
    Two Hundreds of Kerala Nurses resigned their jobs in Maharashtra Private Hospitals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X