“பெண்களை அடிக்க கை ஓங்குனா அந்த கையை உடைச்சு அவங்ககிட்டயே கொடுப்பேன்” - பா.ஜ.கவால் பொங்கிய எம்.பி!
மும்பை: ஒரு பெண்ணைத் தாக்க யாரேனும் கையை ஓங்கினால் அந்தக் கையை உடைப்பேன் என சுப்ரியா சுலே எம்.பி தெரிவித்துள்ளார்.
புனேயில் பா.ஜ.க தொண்டர்களால் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் தாக்கப்பட்ட நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார் சுப்ரியா சுலே.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்
ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தாக்குவதுதான் மராத்திய கலாச்சாரமா என்றும் பா.ஜ.கவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் சுப்ரியா சுலே எம்.பி.

பாஜக நிகழ்வு
பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிருதி ராணி, புனேவில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் சிலர், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்த மெமோரண்டத்தை அவரிடம் அளிக்க முயன்றுள்ளனர்.

பாஜகவினர் தாக்குதல்
அப்போது திடீரென பா.ஜ.க-வினருக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தேசியவாத காங்கிரஸை சேர்ந்த பெண் மீது பா.ஜ.க-வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, அவர் பா.ஜ.கவினர் மீது புகார் அளித்தார். பெண் மீது தாக்குதலில் ஈடுபட்டபா.ஜ.க-வை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சுப்ரியா சுலே
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் மீதான பா.ஜ.க தொண்டர்களின் தாக்குதலை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பியும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சுப்ரியா சுலே, "ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தாக்குவது மராத்திய கலாசாரமா? இது ஷாஹு மகாராஜ், பாபாசாகேப் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி போன்றோரின் மகாராஷ்டிரா. பெண்களை மதிப்பவர்கள் வாழ்ந்த மண்ணில் இந்த வேலை வேண்டாம்" எனத் தெரிவித்தார்.

கையை உடைப்பேன்
மேலும் சுப்ரியா சுலே நேற்று பேசுகையில், "இப்போது நான் சொல்கிறேன், இனிமேல் மகாராஷ்டிராவில் ஒரு பெண்ணை அடிக்க யாரேனும் கை ஓங்கினால், நானே சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் பெண்ணை அடிக்க முயன்றவரின் கையை உடைத்து அவரிடமே கொடுப்பேன்" எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.