மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அஜித் பவார் ஏன் இப்படி செய்தார்.. தேவேந்திர பட்னாவிஸ் சொன்ன பதில் இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா!| Devendra Fadnavis resigns as the Chief Minister

    மும்பை: சரியான நேரத்தில், சரியான தகவலை சொல்வேன் என கூறியுள்ளார், மகாராஷ்டிரா காபந்து முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை நம்பி ஆட்சியமைத்துவிட்டு, பின்னர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ். அஜித் பவார் எதற்காக திடீரென கூட்டணியை விட்டு வெளியேறினார் என்பது குறித்து, மர்மம் நிலவுகிறது.

    I will say the right thing at the right time, says Devendra Fadnavis

    இதுபற்றி, நிருபர்கள் இன்று தேவேந்திர பட்னாவிசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நான் சரியான நேரத்தில், சரியான தகவலை சொல்வேன். கவலை வேண்டாம் என்று பதிலளித்தார்.

    பட்னாவிஸ் ராஜினாமா செய்த சில நிமிடங்களில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கப்போவதாக அறிவித்தன. அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசில் வந்து இணைந்து கொண்டுள்ளார்.

    தியாகம்.. அப்பாவிற்காக எம்எல்ஏ பதவியை துறக்க தயாராகும் ஆதித்யா தாக்கரே?.. என்ன பின்னணி? தியாகம்.. அப்பாவிற்காக எம்எல்ஏ பதவியை துறக்க தயாராகும் ஆதித்யா தாக்கரே?.. என்ன பின்னணி?

    உத்தவ் தாக்ரே நாளை முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், பாஜக தலைவர், ஏக்நாத் கட்சே அளித்த பேட்டியொன்றில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவை, பாஜக பெற்றிருக்க கூடாது. இது எனது தனிப்பட்ட கருத்து. மிகப்பெரிய நீர்ப்பாசன மோசடியில், அஜித் பவாருக்கு தொடர்பு உள்ளது. எனவேதான் அவரது ஆதரவை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபோன்ற அதிருப்தி கருத்துக்களுக்கு நடுவே, சரியான நேரத்தில் சரியான தகவலை சொல்வேன் என பட்னாவிஸ் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அஜித் பவார் குறித்து, பட்னாவிஸ் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    English summary
    "I will say the right thing at the right time", said caretaker chief minister Devendra Fadnavis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X