மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பை அருகே.. வெள்ளத்தில் தவித்த மக்களை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய ராணுவம்.. மாஸ் வீடியோ

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் பெய்து வரும் கன மழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல விமானங்கள் மற்றும் ரயில்க்ள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை, தானே மற்றும் நவி மும்பையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், மும்பை அருகேயுள்ள கல்யாண் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, கட்டிடத்தின் மேற்பகுதியில் நின்றபடி அபயக் குரல் எழுப்பிய பொதுமக்களில் 9 பேரை, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 வகை ஹெலிகாப்டர் மூலம், மீட்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

IAF Mi-17 helicopter rescued 9 people, stranded atop a building in Kalyan

தேசிய பேரிடர் மீட்பு படையினருடன், ராணுவத்தினரும் களமிறங்கி மக்களுக்கு தேவையான மீட்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெள்ளத்தில் தவித்த இந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் தத்ரூபமாக உள்ளது இந்த வீடியோ காட்சி.

சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்தபோதும், ராணுவத்தினர் ஹெலிகாப்டர்கள் வழியாக உணவு பொட்டலங்களை வழங்கினர். படகுகளில் மக்களை காப்பாற்றி அழைத்துச் சென்றனர். இப்போது மும்பையிலும் மழைக்கு நடுவே, உயிரை பணயம் வைத்து ராணுவ வீரர்கள் செய்த இந்த சேவை, பாராட்டுக்குரியது.

English summary
Maharashtra: IAF Mi-17 helicopter rescued 9 people, stranded atop a building in Kalyan, today. They were rescued and dropped at Mumbai airport. (Video Source: Indian Air Force)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X