மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காந்தியை கொன்றதற்கு கோட்சேவுக்கு நன்றி கூறிய பெண் ஐஏஎஸ் அதிகாரி.. கடும் எதிர்ப்புக்கு பின் இடமாற்றம்

Google Oneindia Tamil News

மும்பை: மகாத்மா காந்தியை விமர்சித்ததாக பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் நிதி சவுதாரி. ஐஏஎஸ் அதிகாரியான இவர் மும்பை மாநகராட்சியில் துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய பதிவை செய்திருந்தார்.

அதில் அவர் கூறுகையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்து வருவது விந்தையாக உள்ளது. அவரது உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்குவோம். உலகம் முழுவதிலுள்ள காந்தியின் சிலைகளை அகற்றுவோம். கல்வி நிறுவனங்கள், சாலைகள் என அனைத்துக்கும் அவரது பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரை வைப்போம்.

திமுக வலையில் 4 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. கட்சி இப்தார் விருந்தை புறக்கணித்த 'ஷாக்' எடப்பாடி! திமுக வலையில் 4 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. கட்சி இப்தார் விருந்தை புறக்கணித்த 'ஷாக்' எடப்பாடி!

சர்ச்சை

சர்ச்சை

இதுதான் நாம் மகாத்மா காந்திக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். அது போல் காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார். இந்த டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சரத்பவார் கடிதம்

சரத்பவார் கடிதம்

இந்த நிலையில் சவுதாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தினார். இந்த நிலையில் மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கடிதம் எழுதினார்.

சவுதாரி விளக்கம்

சவுதாரி விளக்கம்

இந்த நிலையில் காந்தியை தான் தரக்குறைவாக பேசவில்லை என்றும் கோட்சே ஆதரவாளர்களை கிண்டல் செய்யவே அவருக்கு நன்றி என போட்டதாகவும் தனது கருத்து திரித்து கூறப்பட்டுவிட்டது என்றும் சவுதாரி விளக்கம் அளித்தார்.

விளக்கம்

இதனிடையே அவரை மந்த்ராலயாவில் குடிநீர் விநியோக துறையின் துணை செயலாளர் பணிக்கு இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காந்தியை விமர்சித்தது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
Mumbai IAS officer Nidhi Choudhari gets transferred after she made derrogatory tweet on Gandhiji.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X