மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச்செல்லும் எமதர்மராஜன்.. மும்பையில் முயற்சி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை எமதர்மராஜன் வேடத்தில் வருபவர் தூக்கிச் சென்று பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிட்டார். இதை பார்த்து மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடப்பதால் விபத்துகள் ஏற்படுதை தடுக்க மும்பை மேற்கு ரயில்வே காவல்துறை சார்பில் எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

If you cross the track in an unauthorized way in mumbai, Yamraj will find you and teach you a lesson

ஓடும் ரயிலில் ஏறுவது மற்றும் இறங்குவது போன்ற நிகழ்வுகள் மற்றும் தண்டாவளத்தில் அபாயகரமாக நடப்பத போன்ற நிகழ்வுகளால் அதிக அளவு விபத்துக்கள் நடக்கிறது. இந்த சம்பவங்களுக்கு மக்களிடையே உள்ள அலட்சியமே காரணம் ஆகும்.

If you cross the track in an unauthorized way in mumbai, Yamraj will find you and teach you a lesson

எவ்வளவு தான் அபராதம் போட்டாலும் மக்கள் இதுவரை தண்டவாளத்தை கடப்பதையோ ஓடும் ரயிலில் இருந்து இறங்குவதையோ நிறுத்துவதில்லை. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்க மும்பை ரயில்வே காவல்துறை முடிவு செய்தது.

If you cross the track in an unauthorized way in mumbai, Yamraj will find you and teach you a lesson

இதன்படி மும்பை ரயில் நிலையத்தில் எமதர்மராஜன் வேடமணிந்த ரயில்வே போலீஸ்காரர் ஒருவர, தண்டவாளத்தை கடக்கும் நபரை தடுப்பதும், தண்டவாளத்தில் நடந்துச் செல்லும் நபரை தூக்கிக் கொண்டு காப்பாற்றுவதும் போன்ற விழிப்புணர்வு நடந்தது. இந்த விழிப்புணர்வு அங்கிருந்த மக்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

English summary
Crossing railway tracks in Mumbai? Yamraj will find you and teach you a lesson : Western Railways
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X