மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு.. சிவசேனாவில் இணையும் பிரியங்கா சதுர்வேதி

Google Oneindia Tamil News

மும்பை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள பிரியங்கா சதுர்வேதி, சிவசேனாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸில் செய்தி தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிவிட்டு நேற்று வெளியேறினார். காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது தனக்கு இருந்த அதிருப்தியை, கடந்த இரு நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் பிரியங்கா சதுர்வேதி. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது,

In a setback to Congress in Maharashtra, Priyanka Chaturvedi joining in Shiv Sena..

கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களை விட அடியாட்களுக்கு தான் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுப்பதாக சாடியிருந்தார், உள்கட்சியிலேயே கடும் விமர்சனங்களையும், தாக்குதல்களையும் சந்தித்து பொறுமையாக இருந்த நிலையில், தன்னை மிரட்டியவர்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்காமல் அவர்கள் மீதான இடைக்கால தடையை கட்சி தலைமை நீக்கியிருப்பது எவ்வகையில் நியாயம் என வினவியிருந்தார்.

சட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு சட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு

கட்சி தலைமையை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த அவர் அப்போதே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என்ற வார்த்தையை நீக்கியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முழுவதுமாக விலகுவதாக கூறி ராகுலுக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.
தற்போது பிரியங்கா சதுர்வேதி சிவசேனா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சிக்காக திறமையான செயல்பட்டு வந்தவர் பிரியங்கா சதுர்வேதி. இவரது விலகல் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

English summary
Priyanka Chaturvedi, who has resigned from the Congress party, has been reported to be in the Shiv Sena.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X