மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும்.. சொல்வது ரிசர்வ் வங்கி கவர்னர்

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா வைரசால் இந்தியாவில் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

Recommended Video

    வரலாறு காணாத பங்குச்சந்தை வீழ்ச்சி..எப்போது சரியாகும்?

    ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    India not immune to coronavirus, slowdown in the domestic economic growth expected: RBI governor

    இந்த தொற்றுநோயை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை. ஏற்கனவே 100 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. போர்க்கால அடிப்படையில், இந்த நோயை கட்டுப்படுத்த, அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு வர்த்தகத்தில் இந்தியாவை நேரடியாக பாதிக்கக்கூடும், இதில் சீனாவுக்கு பாதிப்பு மிக அதிகம்.

    கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது சுற்று விளைவுகள் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் மந்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
    வெளிப்படையாக உலகளாவிய மந்தநிலையின் விளைவாக இது இருக்கும். உலகம் முழுக்கவே, கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வளர்ச்சி வேகமும் ஓரளவு பாதிக்கப்படும்.

    சுற்றுலா, விமான நிறுவனங்கள், விருந்தோம்பல் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் செயல்பாட்டு இழப்பை சந்தித்து வருகின்றன. நிதி மற்றும் அது சார்ந்த துறைகள் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அந்நிய செலாவணி மற்றும் பங்குச் சந்தைகளும் எதிர்ப்பு சக்தி கொண்டவை அல்ல. இவ்வாறு சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

    English summary
    Coronavirus outbreak rapidly evolving into a human tragedy. India is not immune to this pandemic, over 100 cases already reported.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X