மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மும்பையில் காலமானார்

Google Oneindia Tamil News

மும்பை: நாட்டின் முதல் பெண் டிஜிபியான காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மும்பையில் உடல் நலக்குறைவால் திங்கள் அன்று உயிரிழந்தார்.

1973ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர் காஞ்சன் சவுத்ரி. இவர் கடந்த 2004ல் உத்தரகாண்ட் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை காஞ்சன் சவுத்ரி பெற்றார்.

Indias first woman DGP Kanchan Chaudhary Bhattacharya passes away at mumbai

சுமார் 3ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றி காஞ்சன் சவுத்ரி, கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார்

அதன்பிறகு அவர் அரசியலில் இறங்கி சாதிக்கும் ஆர்வத்துடன் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பாக கடந்த 2014ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு தோல்வியே கிடைத்தது.

இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்து காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மும்பையில் உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.

காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உத்தரகாண்ட் காவல்துறை நேற்று டுவிட் பதிவினை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் காஞ்சன் சவுத்ரி காவல்துறையில் ஆற்றிய அற்புதமான பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளார்கள்.

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளது.

English summary
India's first woman DGP Kanchan Chaudhary Bhattacharya passes away at mumbai. she was appointed the DGP of Uttarakhand in the year 2004
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X