மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்கிகளுக்கு வீழ்ச்சி.. ஆட்டோமொபைலும் காலி.. பெரும் சரிவோடு முடிந்த பங்கு சந்தை.. ஷாக்கிங்!

மும்பை பங்கு வர்த்தகம் இன்று காலை பெரிய சரிவோடு தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sensex Nifty Worst | இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி

    மும்பை: மும்பை பங்கு வர்த்தகம் இன்று காலை பெரிய சரிவோடு தொடங்கியது. அதன்பின் மேலும் சரிவை சந்தித்து பெரிய வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. பங்கு வர்த்தகர்களை இந்த சரிவு பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள்.

    அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தாமரை மலரவே இல்லை.. ஆனாலும் தமிழிசை நிறைந்துவிட்டார்.. இந்த கருத்து கணிப்பு முடிவை பாருங்க!தாமரை மலரவே இல்லை.. ஆனாலும் தமிழிசை நிறைந்துவிட்டார்.. இந்த கருத்து கணிப்பு முடிவை பாருங்க!

    என்ன திருத்தம்

    என்ன திருத்தம்

    இந்த நிலையில் கடந்த வாரம் ஆட்டோமொபைல் துறைக்கான சீர்திருத்தங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேபோல் இழப்பில் இயங்கும் வங்கிகளை இணைப்பதாக அறிவித்தார். இதனால் பொதுத்துறை வங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இதனால் பொருளாதாரத்தில் எந்த விதமான வளர்ச்சியோ, பாராட்ட தகுந்த மாற்றமோ நடக்கவில்லை. மும்பை பங்கு வர்த்தகம் இன்று காலை பெரிய சரிவோடு தொடங்கி உள்ளது. பங்கு வர்த்தகர்களை இந்த சரிவு பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்செக்ஸ் 403.18 புள்ளிகள் குறைந்து 36,929 புள்ளிகளுடன் தொடங்கியது. அதேபோல் நிஃப்டி 120 புள்ளிகள் குறைந்து 10902 புள்ளிகளுடன் தொடங்கியது.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    காலையில் புள்ளிகள் எப்படி சரிவுடன் தொடங்கியதோ அதேபோல்தான் நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக புள்ளிகள் சரிந்தது. அதன்பின் மொத்தமாக 800 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் நிறைவு பெற்றது. மாலையில் 36,428 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. அதேபோல் நிஃப்டி மேலும் சரிந்து 51 புள்ளிகள் சரிந்து 10,851.35 புள்ளியுடன் நிறைவு பெற்றது.

    இன்று சரிவு

    இன்று சரிவு

    முக்கியமாக வங்கிகள், ஆட்டோமொபைல் துறைகள் அதிக சரிவை சந்தித்தது. டாடா மோட்டார், ஐசிஐசி வங்கிகள், எச்டிஎப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரி ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்தது. வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை இணைத்தது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    மேலும் சரிவு

    மேலும் சரிவு

    மத்திய அரசு எந்த விதமான அறிவிப்பை வெளியிட்டும் சந்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால்தான் பங்கு வர்த்தகம் மோசமான சரிவை சந்தித்துள்ளது. முக்கியமாக ஆட்டோமொபைல் மற்றும் வங்கிகள் அதிக சரிவை சந்தித்துள்ளது. இது மீண்டும் சரியவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Indian Economy: Sensex plunges more, losses 400 points early morning, hits the Banking sector.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X