மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புகையை கக்கியபடி.. சீறிப் பாய்ந்த ஏவுகணை.. அரபிக் கடலில் கப்பலை மூழ்கடித்த திக் திக் காட்சி- வீடியோ

Google Oneindia Tamil News

மும்பை: அரபிக் கடலில் இந்திய கடற்படை இன்று நடத்திய பயிற்சியின்போது, பழைய கப்பலை ஏவுகணை கொண்டு சரியாக தாக்கி அழித்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

    அரபிக் கடலில் பழைய கப்பலை ஏவுகணை கொண்டு சரியாக தாக்கிய ஏவுகணை - வீடியோ

    சீனாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தால் லடாக் எல்லையில், இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பல்வேறு ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது.

    கப்பலிலிருந்து செலுத்தும் வடிவிலான பிரமோஸ் ஏவுகணை, பிருத்வி ஏவுகணை, 750 கிலோ மீட்டர் தூரம்வரை அணு குண்டுகளை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் என வரிசையாக பரிசோதித்து வருகிறது.

    பாதுகாப்பான இடத்திற்கு போங்க.. கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைபாதுகாப்பான இடத்திற்கு போங்க.. கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ரஷ்யாவிடம் வாங்கிய ஏவுகணை

    ரஷ்யாவிடம் வாங்கிய ஏவுகணை

    இந்த நிலையில் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை இந்திய கடற்படை இன்று பரிசோதனை நடத்திப் பார்த்தது. அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் பிரபாலில் இருந்து, ஏவுகணை ஏவப்பட்டது. கேஎச் 35, உரான் என்ற அந்த ஏவுகணைகள் ரஷ்யாவிடமிருந்து நாம் வாங்கியது. சுமார் 130 கி.மீ தூரம் சென்று தாக்கக் கூடியது.

    சீறிய ஏவுகணை

    சீறிய ஏவுகணை

    இந்த ஏவுகணை, சீறிப் பாய்ந்து, பின்னர் அது வேகமாக பறந்து சென்று, கடலில் நிறுத்தப்பட்டு இருந்த பழைய கடற்படைக் கப்பலான கோதாவரியை மிகத் துல்லியமாக தாக்கி கடலுக்குள் மூழ்கடித்தது. இந்த விறுவிறு வீடியோ காட்சியை இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ளது. புகையை கக்கியபடி ஏவுகணை சீறிப் பாயும் காட்சி, பார்க்கவே பரபரப்பாக இருந்தது.

    கப்பல் மூழ்கடிப்பு

    கப்பல் மூழ்கடிப்பு

    இவ்வாறு, தாக்கி மூழ்கடிக்கப்பட்ட கோதாவரி கப்பல் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கப்பலாகும். கடற்படையில் 1983ம் ஆண்டு சேர்க்கப்பட்ட இந்த கப்பலுக்கு 2015ஆம் ஆண்டில் விடை கொடுக்கப்பட்டது.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    நேற்று வியாழக்கிழமை, கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இந்திய கடற்படை வீரர்களின் பணித் தயார்நிலை மற்றும் போர் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார். விமானம் தாங்கி, ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா மற்றும் போர் குழுவ கப்பல்கள் இதில் அடங்கும்.

    English summary
    In a video released by Indian Navy, an old, decommissioned guided missile frigate of the Godavari class has been sunk by an anti-ship missile fired by INS Prabal, a corvette.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X