மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பொது முடக்கம்...மக்கள் என்ன அதிகமாக வாங்கினர்...இவற்றுக்கு மவுசு அதிகம்!!

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவே கொரோனா வைரஸ் தாக்கத்தால் முடங்கிப் போயுள்ளது. என்னதான் ஆங்காங்கே தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், மக்கள் அச்சத்துடன், வாழ்வாதாரத்துக்கும், குடும்ப சூழலுக்கும் வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் தங்களது ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த பொது முடக்க காலத்தில் இவர்கள் எதற்கெதற்கு தங்களது பணத்தை அதிகமாக செலவு செய்தார்கள் என்று பார்க்கலாம்.

கொரோனா பரவலை சமாளிக்க திணறும் கர்நாடக அரசு.. களமிறங்கிய ஆம் ஆத்மி.. மக்களுக்கு உதவும் 'ஆப் கேர்' கொரோனா பரவலை சமாளிக்க திணறும் கர்நாடக அரசு.. களமிறங்கிய ஆம் ஆத்மி.. மக்களுக்கு உதவும் 'ஆப் கேர்'

ஆயுர்வேதா மருந்து

ஆயுர்வேதா மருந்து

நாடு முழுவதும் இருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்திற்குத்தான் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஆயுர்வேதா மருந்துகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். தாபர் இந்தியா லிமிடெட் மற்றும் ஹிமாலயா மருந்து நிறுவனங்களின் மருந்துகளை வாங்கி சாப்பிட்டுள்ளனர். chyawanprash அதிகமாக வாங்கியுள்ளனர். இதில் தேன், சர்க்கரை, நெய், மூலிகை மருந்துகள், மசாலா ஆகியவை உள்ளது. சைனஸ், டான்சில்ஸ் ஆகிய தொந்தரவுகளுக்கு நிவாரணம் அளிக்கும் செப்டிலின் என்ற மருந்தை அதிகம் வாங்கியுள்ளனர். இதிலும் மூலிகை உள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் Chyawanprash விற்பனை 283%மாக அதிகரித்துள்ளது. தாபர் நிறுவனத்தில் தேன் மட்டும் 39% அதிகரித்துள்ளது. இந்த தகவல்களை நீல்சன் ஹோல்டிங்க்ஸ் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை chyawanprash விற்பனை 700% வரை அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் என்பதால் இவற்றுக்கு மக்கள் முக்கியத்தும் அளித்து வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்

கடந்த மார்ச் மாதத்தில் பேக்டு புட் வகைகளுக்கு அதிக கிராக்கி இருந்துள்ளது. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், மேக்கி, அரிசி, குக்கிங் ஃபேட்ஸ் ஆகியவற்றை அதிகமாக வாங்கியுள்ளனர். இவற்றுக்கு இன்னும் தேவை அதிகமாக இருந்தபோதும், அவை இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிட் கேட்

கிட் கேட்

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கால கட்டத்தில் இந்த நிறுவனத்தின் வருமானம் 10.7% அதிகரித்துள்ளது. நூடுல்ஸ், கிட் கேட், மஞ்ச் ஆகியவை அதிகமாக விற்கப்பட்டுள்ளது. பார்லே ஜி நிறுவனத்தின் பிஸ்கட்டுகள் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரிட்டானியா நிறுவனத்தின் உணவுப் பொருட்களுக்கு அதிக கிராக்கி இருந்துள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ. 4,500 ஆக இருந்தது. இது ஆகஸ்ட் 6ஆம் தேதி 3,857.65 ஆக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் போட்டி நிறுவனங்ககள்

லேப் டாப்

லேப் டாப்

மாணவர்கள் அதிகமாக விரும்பி செல்லும் பைஜூஸ் ஆன் லைன் யூடியூப் சேனலுக்கு மாணவர்களின் வருகை எண்ணிக்கை ஏப்ரல், ஜூன் மாதங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து லேப் டாப் தேடுவோரின் சதவீதம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. ஜீ5 மே மாதத்தில் ஆக்டிவ் பயனாளர்கள் 45% அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை முந்திச் சென்றுள்ளது ஜீ5.

நகைக் கடன்

நகைக் கடன்

நாட்டில் பெரும்பாலானவர்கள் வேலைகளை இழந்துள்ளனர். வேறு வேலை தேட முடியாத சூழலில் உள்ளனர். இந்த நிலையில் தங்களிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து குடும்ப நிலைகளை சீராக்கி வருகின்றனர். முத்தூட் பினான்ஸ் மற்றும் மணப்புரம் பினான்ஸ் இரண்டும் அதிக அளவில் நகைக் கடன் கொடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. முத்தூட் பினான்ஸ் 57% கூடுதலாக நடப்பாண்டில் நகைக் கடன் கொடுத்துள்ளது.

பாத்திரம் கழுவும் இயந்திரம்

பாத்திரம் கழுவும் இயந்திரம்

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஜூசர், மிக்ஸி, மைக்ரோவேவ், டோஸ்டர் ஆகியவை அதிகளவில் விற்றுள்ளன. வாக்கம் கிளீனர் நான்கு மடங்கு அதிகமாக விற்றுள்ளது. பாத்திரம் கழுவும் இயந்திரத்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது. ஐஎப்பி நிறுவனத்தால் இந்த இயந்திரத்தை கொடுக்க முடியவில்லை. காரணம், ஸ்டாக் இல்லை என்பதுதான்.

டிரிம்மர்கள்

டிரிம்மர்கள்

கொரோனா காரணமாக சலூன் கடைகள் அடைத்து இருப்பதால் பலரும் டிரிம்மர்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். கொரோனாவுக்கு முன்பு இருந்ததைவிட ஐந்து மடங்கு அதிகமாக இதை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இதேபோல் பிலிப்ஸ் நிறுவனத்தில் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்கள் 60%-70% அதிகமாக விற்றுத் தீர்ந்துள்ளது. இந்த தகவல்களை நீல்சன் ஹோல்டிங்க்ஸ் வெளியிட்டுள்ளது.

English summary
Indians have spend money to buy these items during Coronavirus Pandemic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X