மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவு முழுவதும் அப்படியே இருக்க சொன்ன இண்டிகோ.. பதறிப்போன பயணிகள்.. விசாரணை ஆரம்பம்

Google Oneindia Tamil News

மும்பை: பட்ஜெட் ரேட்டில் விமான சேவை வழங்குவதால் பிரபலமான இண்டிகோ விமான சேவை நிறுவனம், இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த சர்ச்சை சம்பவம் குறித்து விமான ஒழுங்குமுறை அமைப்பு, விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் புதன்கிழமை இண்டிகோ பல விமானங்களை ரத்து செய்தது. இதனால், பயணிகள் அவதியை எதிர்கொள்ள நேர்ந்தது.

IndiGo passengers forced to sit in stranded flight in Mumbai

இதுபற்றி பயணி ஒருவர் கூறுகையில் 'எனது இண்டிகோ விமானம் புதன்கிழமை மாலை 07.55 மணிக்கு ஜெய்ப்பூருக்கு புறப்பட வேண்டியது. இருப்பினும், வியாழக்கிழமை காலை 6 மணிக்குதான் விமானம் புறப்பட்டது, நான் காலை 8 மணியளவில் ஜெய்ப்பூரை அடைந்தேன். நள்ளிரவில் விமானத்தில் ஏற்றப்பட்டு அப்படியே உட்கார வைக்கப்பட்டோம். எங்களை வெளியே விடவில்லை. இன்று காலைவரை விமானத்திற்கு உள்ளேயே இருந்தோம். எங்களுக்கு இரவு உணவு கூட வழங்கப்படவில்லை' என்றார்.

நீலம், பச்சை.. மாயமாக தோன்றி மறைந்த வெளிச்சம்.. நாசாவை வியக்க வைத்த ஒளி.. வானத்தில் புது மர்மம்!நீலம், பச்சை.. மாயமாக தோன்றி மறைந்த வெளிச்சம்.. நாசாவை வியக்க வைத்த ஒளி.. வானத்தில் புது மர்மம்!

விமானத்தில் இருந்த சில பயணிகள் கோபமடைந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆதங்கத்தாலும், பதற்றத்தாலம், சில பயணிகள் தொழில் பாதுகாப்பு படையினரான சி.ஐ.எஸ்.எஃபுக்கு தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு கதறியுள்ளனர்.

இது குறித்து விமான ஒழுங்குமுறை அமைப்பு மூத்த அதிகாரி ஒருவரிடம் பிடிஐ செய்த நிறுவனம் கேட்டபோது, ​​"இந்த விஷயத்தை நாங்கள் விசாரிப்போம்" என்று கூறியுள்ளார். இது குறித்த கேள்விக்கு இண்டிகோ இதுவரை பதிலளிக்கவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Aviation regulator DGCA will probe the alleged incident of budget carrier IndiGo forcing the passengers of its Jaipur-bound flight to sit in the stranded aircraft at Mumbai Airport on Wednesday night, a top official source said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X