மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடித்து நொறுக்கிய பங்குச் சந்தை...முதலீட்டாளர்கள்...சில நிமிடங்களில் ரூ. 2.12 லட்சம் கோடி இழப்பு!!

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் சில நிமிடங்களில் ரூ. 2.12 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர். இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் துவங்கியது முதல் பயங்கர சரிவு சென்செக்சில் எதிரொலித்தது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து முதலீட்டலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தை இன்று காலை துவங்கியது முதல் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. சென்செக்ஸ் 38,365.01களாக சரிந்தது. அதாவது இன்று காலை 9.20 மணிக்கு வர்த்தகம் துவங்கியவுடன் 625.93 புள்ளிகள் சரிந்தது. 1.61 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. நிப்டி 11,357.05களாக சரிந்தது. அதாவது 170.40 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

இந்திய பங்குச் சந்தை...சில நிமிடங்களில்...முதலீட்டாளர்கள்...ரூ. 2.12 லட்சம் கோடி இழப்பு!!

இதனால் பங்குச் சந்தை துவங்கிய சில நிமிடங்களில் முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 2.12 லட்சம் கோடியை இழந்தனர்.

நேற்று இந்திய பங்குச் சந்தையின் முதலீட்டு மதிப்பு ரூ. 156.86 லட்சம் கோடியாக இருந்தது. இது இன்று ரூ. 154.85 லட்சம் கோடியாக சரிந்தது.

Investors lose Rs 2.12 lakh crore within minutes; sensex down 600

உதயநிதி ஸ்டாலினுக்காக களமிறங்கும் புதிய குழு... முழு பாய்ச்சலுக்கு தயாராகும் திமுக...!உதயநிதி ஸ்டாலினுக்காக களமிறங்கும் புதிய குழு... முழு பாய்ச்சலுக்கு தயாராகும் திமுக...!

30 பங்குகள் கொண்ட சென்செக்சில் ஐசிஐசிஐ வங்கி பெரிய அளவில் சரிவை சந்தித்து இருந்தது. இதன் பங்கு மதிப்பு இன்று மட்டும் 2.99 சதவீதம் சரிந்து ரூ. 371.30 ஆக உள்ளது. இதேபோல் கோடக் மகேந்திரா, எஸ்பிஐ, இந்தஸ்இந்த், ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்கு மதிப்புகளும் பெரிய அளவில் சரிந்துள்ளது.

நேற்று நாஸ்டாக் பங்குச் சந்தை 5 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்து இருந்தது. இது இன்று இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. மைக்ரோ சாப்ட், ஆப்பிள் ஆகியவற்றின் பங்குகள் நேற்று சரிந்து இருந்தன. ஆசிய சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. ஜப்பானின் நிக்கி பங்குச் சந்தை 1.6சதவீத சரிவைக் கண்டுள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தை 1.8 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

English summary
Investors lose Rs 2.12 lakh crore within minutes; sensex down 600
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X