மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத போதகர் ஜாகீர் நாயக் சொத்துகள் முடக்கம்... தீவிரவாதத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

மும்பை: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வங்கதேசத்தின் டாக்கா பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே சமயம், தலைமறைவாக உள்ள ஜாகிர்நாயக்கை இந்தியா கண்காணிக்கும் படி அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

Islamic religious leader zakirnaik assets worth Rs 16 crore frozen

இதனையடுத்து, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

மேலும், ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் 16.40 கோடி ரூபாய் மதிப்புடைய மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 50 கோடியே 49 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

English summary
Enforcement Department has frozen assets worth Rs 16 crore of Islamic religious leader zakirnaik.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X