மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது ஜஸ்ட் டிரைலர் தான்; அடுத்து மெயின் பிக்சர் - முகேஷ் அம்பானிக்கு பகிரங்க எச்சரிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய காரை நிறுத்தியதாக ஜெய்ஷ்-உல்-ஹிந்த் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மும்பை பெட்டார் பகுதியில் அமைந்துள்ளது முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட மாளிகை. 'அண்டிலா ஹவுஸ்' என்றழைக்கப்படும் இந்த இல்லம் உலகளவில் பிரபலம்.

இவரது வீட்டை சுற்றி எப்போதும் தனியார் பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த பிப்.25 அன்று மாலை முகேஷ் அம்பானியின் அண்டிலா ஹவுஸ் அருகே வெடிப்பொருள் நிரப்பப்பட்ட சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

Jaish-ul-Hind claims responsibility mukesh Ambani bomb scare threatens

அம்பானி வீட்டில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே காவல்துறையுடன் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழுவும், பயங்கரவாத தடுப்புக் குழுவினரும் சென்றனர். அந்தக் காரில் ஜெலட்டின் குச்சிகள் மட்டுமே இருந்த நிலையில், வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஸ்கார்பியோ எஸ்யுவி வாகனத்தில் வருவதும், அந்தக் காரை நிறுத்திவிட்டு இனோவா காரில் ஏறிச் செல்வதும் கண்டறியப்பட்டது. அதே வியாழன் அன்று, மர்ம நபர் ஏறிச் சென்ற இன்னோவா கார் சிசிடிவியில் கண்டறியப்பட்டது. தானே-முலுண்ட் டோல் பிளாசா வழியாக சிட்டியை விட்டு வெளியேறியதை ​​மும்பை குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

எனினும், அந்த ஓட்டுனரின் முகத்தை சரியாக காண முடியவில்லை. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய காரை நிறுத்தியதாக ஜெய்ஷ்-உல்-ஹிந்த் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வெளி உலகில் அதிகம் அறியப்படாத இந்த அமைப்பு டெலிகிராம் ஆப் மூலம் இதனை தெரிவித்துள்ளது.

41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக!41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக!

மேலும் அதில், "அம்பானி வீடு அருகே எஸ்யுவி காரை நிறுத்திய சகோதரர் பத்திரமாக வீடு வந்து சேர்ந்துவிட்டார். இது வெறும் டிரைலர் தான்; மெயின் பிக்சர் இனிமேல் தான் வெளியாகும்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிட்காயின் மூலம் பணம் கோரியுள்ள ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு, 'உங்களால் முடிந்தால் எங்களை நிறுத்துங்கள்' என்று புலனாய்வு அமைப்புகளுக்கு சவால் விடுத்துள்ளது.

தவிர, பணம் அனுப்பாவிட்டால் அம்பானியின் பிள்ளைகளுக்கு டார்கெட் வைக்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்ததுள்ளது.

English summary
Jaish-ul-Hind claims responsibility mukesh Ambani bomb scare threatens
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X