மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

84 கோடி மக்கள் வறுமையில்.. அம்பானி மகள் கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா.. ஜிக்னேஷ் மேவானி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    அம்பானி வீட்டு கல்யாணம் - திரைபிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பு- வீடியோ

    மும்பை : நாடு முழுவதும் 84 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கு குறைவாகவே வருமானம் ஈட்டும் நிலையில் பல ஆயிரம் கோடிகளை இறைத்து, ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி மகளின் திருமணம் நடைபெற்றது அவசியமற்றது என்று தலித் போராளி ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

    உலக பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் திருமண நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடந்தது.

    Jignesh Mevani comments on Mukesh Ambani daughters marriage cost

    மிக அதிக பொருட்செலவில் ஆடம்பரமாக நடைபெற்ற அம்பானி மகள் திருமணம், ஆசியாவிலேயே பிரம்மாண்ட திருமணமாக கருதப்படுகிறது. திருமணத்தில். பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என ஒட்டு மொத்த விஐபிக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    Jignesh Mevani comments on Mukesh Ambani daughters marriage cost

    நாடு முழுவதும் வாய்பிளக்க வைத்த திருமணம் குறித்து தலித் போராளியும் பட்டியல் இனத்தவரின் பிரதிநிதியுமான ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ள கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. டுவிட்டரில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது

    முகேஷ் அம்பானி தனது மகள் இஷாவின் திருமணத்திற்கு 700 கோடி செலவழித்துள்ளார். அரசாங்க அறிக்கையின்படி, 84 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கு குறைவாகவே வருவாய் ஈட்டுகிறார்கள்.

    இந்த ஒரு திருமணம் அம்பானியும், அவருக்கு நேர் எதிராக வாழும் ஏழை மக்களையும் ஒரு சேர காட்டுகிறது.

    ஒட்டு மொத்த செல்வமும் ஒருவரிடமே குவிந்துள்ளது. இத்தகைய வெளிப்பாடு என்பது மிகவும் மோசமான நிலை ஆகும் என்று மேவானி கூறியுள்ளார்.

    English summary
    Activist Jignesh Mewani has said in his Tweet that, As per reports Mukesh Ambani spends 700 crore for the wedding of his daughter Isha. As per government reports, 84 crore people survive with less than 20 rupees a day.Isn't this 'We the people' versus Ambanis? This much of accumulation of wealth is obscenity of worst kind.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X