மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்கள்.. அட்டகாச சலுகைகளை அறிவித்த ஜியோ!

Google Oneindia Tamil News

மும்பை: ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ 33 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ள நிலையில் குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட் போன்கள் குறித்த அறிவிப்புகளை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனம் ஜியோ. ஏற்கெனவே வளர்ந்து தங்களுக்கென இடம் பிடித்து வைத்திருந்த அத்தனை தொலைபேசி சேவை நிறுவனங்களையும் தனது அதிரடி அறிவிப்பான இலவச சிம் மூலம் காலி செய்தது ஜியோ.

அடுத்த வருடமே வருகிறது ஜியோ 5ஜி சேவை.. முகேஷ் அம்பானி செம அறிவிப்பு.. சீன ஆதிக்கம் முடிந்தது அடுத்த வருடமே வருகிறது ஜியோ 5ஜி சேவை.. முகேஷ் அம்பானி செம அறிவிப்பு.. சீன ஆதிக்கம் முடிந்தது

நிறுவனம்

நிறுவனம்

இதனால் அந்த நிறுவனங்கள் நீதிமன்றங்களுக்கு சென்றன. எனினும் அந்த நிறுவனம் தனது அதிரடி ஆஃபர்கள் மூலம் பெரிய அளவில் முன்னேறி வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸின் 43 ஆவது பொது கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனத்தில் ரூ 33,737 கோடி அளவுக்கு கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தார்.

பிளே ஸ்டோர்

பிளே ஸ்டோர்

இத்துடன் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து என்ட்ரி லெவல் 4ஜி அல்லது 5 ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடவுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு மற்றும் பிளே ஸ்டோருக்கு கஸ்டமைசேஷனுடன் அறிமுகமாகவுள்ளது.

 வீடியோ கான்ஃபிரன்ஸ்

வீடியோ கான்ஃபிரன்ஸ்

இது தவிர இந்தியாவின் முதல் கிளவுட் சார்ந்த வீடியோ கான்ஃபிரன்சிங் ஆப்பான ஜியோ மீட் வெளியான சில நாட்களில் 50 லட்சத்திற்கும் மேலானோர் அதிக டவுன்லோடுகளை செய்துள்ளதாக அம்பானி தெரிவித்தார்.

முதலீடு

முதலீடு

இதன் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு ஜியோவில் 7.7 சதவீதம் பங்குகள் கிடைக்கும். கூகுள் முதலீட்டை சேர்த்து ஜியோவில் இதுவரை ரூ 1,52,056 கோடி தொகையை பேஸ்புக், இன்ஸ்டா, விஸ்டா ஈக்குவிட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து முதலீடாக பெற்று வருகிறது.

English summary
Jio will introduce low cost 5G smart phones in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X