"காளி" வாயில் சிகரெட்.. சப்போர்ட்டுக்கு வந்த மொய்த்ரா.. காட்டம் காட்டிய திரிணாமுல் காங்.. என்னாச்சு?
மும்பை: காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கு அக்கட்சி சார்பாக தற்போது விளக்கம் தரப்பட்டுள்ளது.
"பறை", "தேவதைகள்", "பலிபீடம்", செங்கடல், "மாடத்தி" என டாக்குமென்ட்ரி படங்களை டைரக்ட் செய்தவர் லீனா மணிமேகலை.. இவர் ஒரு கவிஞரும் கூட.
இப்போது, மறுபடியும் ஒரு ஆவணப்படத்தை எடுக்கிறார்.. அதற்கு 'காளி' என்று பெயர்.. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
தம்மடிக்கும் “காளி” - கொந்தளிக்கும் பாஜக அமைச்சர்.. லீனா மணிமேகலை மீது மபியிலும் புகார்

பரபரப்பு
அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட நொடியில் இருந்தே பரபரப்பும் சர்ச்சையும் வெடித்து கிளம்பிவிட்டது.. காரணம், அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண், வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு காணப்படுகிறார்.. அதாவது தன்பாலின ஈர்ப்பாளர்களின் கொடியை இவ்வாறு சொல்வார்கள்.. அதைதான் தன் கைகளில் இந்த காளி ஏந்தியிருக்கிறார்.. இப்படி ஒரு போஸ்டரை பார்த்ததுமே பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் கொந்தளித்துவிட்டனர். மணிமேகலைக்கு எதிராக கண்டங்களை குவித்து வருகிறார்கள்.

கைது நடவடிக்கை தேவை
அத்துடன் விடவில்லை.. லீனா மணிமேகலை இந்து மதத்தை அவமதிப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், உத்திரபிரதேசம், டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் புகார்களை தந்து வருகிறார்கள்.. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. சட்டரீதியாக புகார்களை தந்தும்கூட, பாஜகவினர் தங்கள் எதிர்ப்பை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்..

லீனா மணிமேகலை
இந்த அளவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவது குறித்து லீனா மணிமேகலை சொல்லும்போது, "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.. இருக்கும்வரை எதுக்கும் பயப்படாமல், நம்புவதை பேசும் குரலோடு இருந்துவிட்டு போகவே விரும்புகிறேன்.. இதுக்கு விலை, என்னுடைய உயிர்தான் என்றால் தாராளமாக தரலாம் என்று கூறியிருந்தார். அதேபோல, திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் ரியாக்ட் செய்து வருகிறது. அக்கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜஹான் இந்த போஸ்டர் குறித்து பேசும்போது, "மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை" என்று கூறியிருந்தார்..

விஸ்கி - கறி
ஆனால், திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அப்போது இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "என்னை பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான்.. தெய்வத்தை கற்பனை செய்து கொள்ள சுதந்திரம் இருக்கிறது. சில இடங்களில் கடவுள்களுக்கு விஸ்கி வழங்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்திற்குச் சென்று மது பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் அவர்கள் அதை நிந்தனை என்று முகம்சுளிப்பார்கள். வேறு சில இடங்களில் அது தெய்வத்துக்கு எதிரானதாக உள்ளது,. எனவே உங்கள் தெய்வத்துக்கு நீங்கள்தான் எல்லாம்.. " என்றார்..

விளக்கம்
மணிமேகலைக்கு அவர் ஆதரவு தந்ததையும், இப்படி ஒரு விளக்கம் தந்ததையும் பார்த்து, பாஜக மேலும் ஆத்திரமடைந்துவிட்டது.. இந்த கருத்தும் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதையடுத்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் மஹுவா மொய்த்ரா கூறிய கருத்துக்கு விளக்கம் தந்துள்ளது... "திரிணாமுல் காங்கிரஸ் இது போன்ற கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறது.. எம்பி மஹுவா மொய்த்ராவின் "காளி தேவி குறித்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து.. அவை எந்த வகையிலும் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை" என்று பதிவிட்டுள்ளது.