மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு

உத்தவ் தாக்கரேவின் முதல்வர் கனவு பாதியிலேயே தகர்ந்து போக காரணம் அவரது நேரம்தான். முக்கிய கிரகங்கள் கை கொடுக்காமல் போனதே முதல்வராக இருந்த அவர் சில ஆண்டிலேயே ராஜினாமா செய்ய காரணமாக அமைந்து விட்டது.

Google Oneindia Tamil News

மும்பை: சிம்ம ராசிக்காரர் உத்தவ் தாக்கரேவிற்கு இப்போ நேரம் சரியில்லை. அவரது ஜாதகத்தில் தசாபுத்தியும் சாதகமாக இல்லை. கோச்சாரப்படி அஷ்டமத்து குருவும் கண்டச்சனியும் சரியாக காலை வாரி விட்டு விட்டது. அரசியலில் சத்ரியனாக இருப்பதை சாணக்கியனாக இருப்பதே மேல் என்பார்கள். உத்தவ் தாக்கரேவிற்கு சாமர்த்தியம் பத்தவில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Recommended Video

    Maharashtra முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக Uddhav Thackeray அறிவிப்பு *Politics

    கடந்த 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்து ஒரு மாதம் நடந்த பின்னரும் மகாராஷ்டிரா அரசியல் களம் படு பரபரப்பாகவே காணப்பட்டது. கூட்டணி அமைத்து போட்டியிட்டு 105 இடங்களை வென்ற பாஜகவும் 56 இடங்களை வென்ற சிவசேனாவும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. காரணம் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற உத்தவ் தாக்கரேயின் ஆசைதான். அவரது ஆசையை ஒதுக்கி தள்ளியது பாஜக.

    இதனால் பாஜக சிவசேனா கூட்டணி முறிந்தது. கர்நாடகாவில் நடந்தது போல காங்கிரஸ் கட்சி உள்ளடி வேலையை தொடங்கியது. பாஜகவை வீழ்த்தவும் ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் தடுக்கவும் பரம வைரியான சிவசேனாவிற்கு ஆதரவு தர முடிவு செய்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கிடையே குடியரசுத்தலைவர் ஆட்சியும் மகராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டது.

    தந்தையை மறவாத தனயன்! பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றிய உத்தவ் தாக்கரே! முதல்வராக எடுத்த கடைசி முடிவுதந்தையை மறவாத தனயன்! பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றிய உத்தவ் தாக்கரே! முதல்வராக எடுத்த கடைசி முடிவு

    உத்தவ் தாக்கரே

    உத்தவ் தாக்கரே

    முதல்வராக வேண்டும் என்று முழு மூச்சுடன் இறங்கிய சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து பேசினார். இறங்கியும் பேசினார். சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியானதாகவே கருதப்பட்டது. உத்தவ் தாக்கரேதான் முதல்வராவார் என்று சரத்பவார் நேற்றிரவு அறிவித்தார். முதல்வராக பதவியேற்கும் கனவோடு உறங்கப்போனார் உத்தவ் தாக்கரே. விழித்து எழுந்த நேரத்தில் காட்சி மாறி ஆட்சியும் மாறியது.

    தேவேந்திர பட்னாவிஸ்

    தேவேந்திர பட்னாவிஸ்

    மராட்டிய அரசில் திடீர் திருப்பமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பொறுப்பேற்றது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

    பாஜக முதல்வர் ராஜினாமா

    பாஜக முதல்வர் ராஜினாமா

    24 மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே பாஜக தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கூட்டணியின் சார்பில் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். 2019ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார்.

    பாதியிலேயே ஆட்டம் கண்ட பதவி

    பாதியிலேயே ஆட்டம் கண்ட பதவி

    மூன்றாண்டுகள் கூட முழுதாக நிறைவடையாத நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் செய்த காரியத்தால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சிவசேனா கட்சிக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 6 பேரும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக வெறும் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை மகாராஷ்டிரா துணை சபாநாயகர் வழங்கினார். இதற்கு ஜூலை 11 வரை உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே பெரும்பான்மையை நாளை அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    இதனை எதிர்த்து சிவசேனா கொறாடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என பரபரப்பான உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவால் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் மகாவிகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    உத்தவ் தாக்கரே ஜாதகம்

    உத்தவ் தாக்கரே ஜாதகம்

    உத்தவ் தாக்கரேவின் ஜாதகத்தில் சிம்ம ராசி சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் அமந்துள்ளார் கூடவே ராகுவின் சஞ்சாரம் உள்ளது. கன்னி லக்னம் மிதுனம் ராசியில் புதன் ஆட்சி பெற்றுள்ளார், ரிஷபத்தில் செவ்வாய் கும்பம் ராசியில் கேது தனுசு ராசியில் சனி வக்ரம், ஆட்சி பெற்ற குரு வக்ரம் கடகம் ராசியில் சூரியன் சுக்கிரன் கூட்டணி அமைந்துள்ளது.

    சுக்கிர திசை

    சுக்கிர திசை

    1960ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த உத்தவ் தாக்கரே பிறக்கும் போது சுக்கிர திசை நடந்துள்ளது. ராகு ததிசை புதன் புத்தி நடந்த காலமான 2003 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் தலைவராக பதவியேற்றார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் நேரத்திலும் அவரது வளர்ச்சி அதிகமானது. காரணம் குரு தசை குரு புத்தி காலத்தில் வளர்ச்சி அதிகம் குரு தசை புதன் புத்தி ஆகஸ்ட் 15, 2017 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிவசேனா பாஜக உடன் கூட்டணி அமைத்து பல இடங்களை கைப்பற்றியது.

    முதல்வர் பதவி

    முதல்வர் பதவி

    நவம்பர் 22, 2019 வரை குரு திசை புதன் புத்தி செயல்பட்டது. சட்டசபை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் உள்ளுக்குள் புகைச்சல் இருந்து கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் கூட்டணி முறிந்து போனது. காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கை கொடுக்கவே முதல்வரானார் என்றாலும் கிரகங்கள் சாதகமாக இல்லாமல் போகவே முதல்வர் பதவி முள்கிரீடம் ஆகி விட்டது.

    நேரம் சரியில்லை

    நேரம் சரியில்லை

    அக்டோபர் 2020 முதல் ஜூன் 2023 வரை குரு திசை சுக்கிர புத்தி நடைபெறும் காலம் உத்தவ் தாக்கரேவிற்கு அப்படி ஒன்றும் விசேஷ மில்லை காரணம் இரண்டுமே ஆறு எட்டு நிலையில் இருக்கின்றன. அவரது உடல் நலத்தில் கூட பாதிப்பு வரலாம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சிம்ம ராசிக்காரர் உத்தவ் தாக்கரேவிற்கு முதல்வராகும் யோகம் கை கூடி வந்தும் அதை நிரந்தமாக தக்கவைக்கத் தெரியவில்லை. ராசியில்லாத ராஜாவாகி விட்டார் உத்தவ் தாக்கரே.

    English summary
    The time is not right now for Leo zodiac sign Uddhav Thackeray. Dasa Bhukthi is also not favorable in his horoscope. According to Kochara, Ashtama Guru and Kanda shani is not favour for Uddhav Thackeray.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X