மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று எனது வீட்டை இடிக்கலாம்.. நாளை உங்கள் ஆணவம் நொறுங்கும்.. உத்தவ் தாக்கரேவுக்கு கங்கனா சவால்

Google Oneindia Tamil News

மும்பை: இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம். ஆனால் நாளை உங்கள் ஆணவம் நொறுங்கும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வழியாக கூறுகையில் உத்தவ் தாக்கரே எனது கட்டடத்தை இடித்ததன் மூலம் என்னை பழிவாங்கியதாகவே நினைக்கிறேன்.

காலம் மாறும். உங்களுடைய அடாவடித்தனம் மாறும். இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம். நாளை உங்கள் ஆட்சி கவிழலாம். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

எனது அலுவலகம் ராமர் கோயிலுக்கு சமம்...நீதிமன்றத்தை நாடிய கங்கனா!!எனது அலுவலகம் ராமர் கோயிலுக்கு சமம்...நீதிமன்றத்தை நாடிய கங்கனா!!

கங்கனா

கங்கனா

உங்களுடைய செயல்பாடுகள் படு பயங்கரமானது என கங்கனா பதிவிட்டுள்ளார். மும்பை பாலி பகுதியில் மாநகராட்சி ஊழியர்களால் கங்கனாவின் அலுவலகம் ஒரு பகுதி இடிக்கப்பட்ட காட்சிகளை பதிவிட்டுள்ள அவர் ஜனநாயக படுகொலை என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு கங்கனா வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

வலி

வலி

அந்த வீடியோவில் கங்கனா பேசுகையில் உத்தவ் தாக்கரே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இன்று எனது வீட்டை இடித்து விட்டீர்கள். நான் உறுதியளிக்கிறேன், நான் அயோத்தியா மட்டுமல்லாமல் காஷ்மீர் பண்டிட்டுகள் பற்றியும் படம் எடுப்பேன். அவர்களின் வலியைத்தான் நானும் அனுபவித்து வருகிறேன் என்றார்.

தப்பு செய்ய மாட்டேன்

தப்பு செய்ய மாட்டேன்

மும்பையில் தனது உயிருக்கு ஆபத்து என கூறியதால் கங்கனாவுக்கு மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்பு வழங்க வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் ஒரு வீடியோவை கங்கனா வெளியிட்டுள்ளார். அதில் கட்டத்தை இடிக்க வேண்டாம் என மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. நான் எப்போதும் தப்பு செய்ய மாட்டேன்.

மும்பை

மும்பை

மீண்டும் அவர்கள் எனது எதிரிகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். இதனால்தான் எனது மும்பை தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உள்ளது என தெரிவித்த கங்கனா மற்றொரு ட்வீட்டில் கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க ஆயத்தமான புகைப்படத்தை போட்டு பாகிஸ்தான் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actress Kangana Ranaut challenged Maharastra CM Uddhav Thackarey for demolishing her house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X