மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள்தொகையால் அதிக இறப்பு.. 3ஆவது குழந்தை பெற்றால் சிறையில் தள்ளணும்.. கங்கனா ரனாவத்

Google Oneindia Tamil News

மும்பை: மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு சிறை தண்டனை தர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகள் போராட்டம், இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகை என்ற கமலின் தேர்தல் அறிவிப்பு, கொரோனா உள்ளிட்ட விவகாரங்களில் மிகவும் மோசமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

கருத்து என்ற பெயரில் அவர் விஷத்தை கக்கி வருகிறார், பாசிஸத்தை உமிழ்ந்து வருகிறார் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஜெயந்தியும் உள்ளே சேர்க்கலை.. மகனும் இல்லை..வேலையும் இல்லை.. நடுரோட்டிலேயே தீக்குளித்த வேல்முருகன்ஜெயந்தியும் உள்ளே சேர்க்கலை.. மகனும் இல்லை..வேலையும் இல்லை.. நடுரோட்டிலேயே தீக்குளித்த வேல்முருகன்

சட்டவிரோதம்

சட்டவிரோதம்

இந்த நிலையில் இந்தியாவில் இப்போது மக்கள் இறந்து கொண்டிருப்பதற்கு காரணம் அதன் மக்கள்தொகைதான் என கங்கனா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி. சட்டவிரோதமாக 25 கோடி பேராவது குடியேறியிருப்பார்கள்.

சிறைத் தண்டனை

சிறைத் தண்டனை

ஆனால் இந்தியாவைப் போல் நிலப்பரப்பில் 3 மடங்கு இருக்கும் அமெரிக்காவின் மக்கள்தொகை 32 கோடிதான் என குறிப்பிட்டுள்ள கங்கனா, மேலும் 3ஆவது குழந்தை பெற்று கொள்கிறவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும் என கூறியுள்ளார்.

கொரோனா

கொரோனா

இவரது கருத்தை பெரும்பாலானோர் விமர்சனம் செய்து வருகிறார்கள். கொரோனாவின் இரண்டாவது அலையால் இன்று இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டு வரும் சூழல் குறித்தும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்தும் ஆக்கப்பூர்வமாக எதையும் கேட்காமல் இது போல் தேவையில்லாத கருத்துகளை கங்கனா பேசியது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

விவசாயிகள்

விவசாயிகள்

விவசாயிகளின் போராட்டத்தையும் இப்படித்தான் கொச்சையாக விமர்சனம் செய்து ட்வீட் போட்டார். இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக வழக்கம்போல் கண்டனங்கள் எழுந்துள்ளன.

English summary
Actress Kangana Ranaut says that those who gives birth for 3rd children should be imprisoned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X