மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனது அலுவலகம் ராமர் கோயிலுக்கு சமம்...நீதிமன்றத்தை நாடிய கங்கனா!!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை மாநகராட்சி தனது அலுவலகத்தை இடித்ததை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நடிகை கங்கனா ராவத் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ராவத்துக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்சி செய்து வரும் சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது. இரண்டாவது முறையாக மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைந்து கங்கனா பேசி இருக்கிறார். இந்த நிலையில் மும்பையில் பாந்த்ரா மேற்கில், பாலி ஹில் பகுதியில் இருக்கும் அவரது அலுவலகம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி, அந்தக் கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இன்று இடித்தது.

Kangana vs Sena: Actor files writ petition against BMC demolition of her office

இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் கங்கனா ராவத் இன்று மும்பை வருகிறார். இந்த நிலையில் அவரது அலுவலக கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இடித்துள்ளது. இதை எதிர்த்து கங்கானாவின் வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவரது அலுவலகம் இடிக்கப்பட்டது குறித்து மும்பை மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், ''சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படும் எந்தக் கட்டிடமும் விட்டு வைக்கப்பட மாட்டாது. தற்போது கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். கங்கனாவுக்கு விளக்கம் அளிக்க 24 மணி நேரம் அளிக்கப்பட்டு இருந்தது'' என்று தெரிவித்துள்ளனர்.

மும்பை மாநகராட்சியை எதிர்த்து கங்கனா ராவத் தொடுத்து இருக்கும் ரிட் மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Kangana அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மும்பை மாநகராட்சி

    மும்பைக்கு புறப்படும் முன் மொஹாலியில் பேட்டியளித்த கங்கனா, ''எனது அலுவகம் ராமர் கோயிலுக்கு இணையானது. மும்பை தரிசனத்திற்கு தயாராகிவிட்டேன். மகாராஷ்டிரா அரசாங்கமும், அவர்களது குண்டர்களும் எனது சொத்தை சட்டவிரோதமாக உடைத்துள்ளனர். மகாராஷ்டிராவின் பெருமையை காப்பாற்ற ரத்தம் தருவதற்கும் தயார்'' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Kangana vs Sena: Actor files writ petition against BMC demolition of her office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X