மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுனுக்கு மத்தியில் மும்பையில் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கியது

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்காக மட்டும் மும்பையில் புறநகர் ரயில்கள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.20 லட்சத்தினை தாண்டி உள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது.

 local trains in Mumbai resumed from today for essential staff

டெல்லியில் 41 ஆயிரத்தையும் மும்பையில் 58 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. இந்த சூழலில் நாட்டின் தேசிய தலைநகரான டெல்லியிலும், தேசிய வர்த்தக தலைநகரான மும்பையிலும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக ரயில்வே ரயில்களை இயக்க திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்காக மட்டுமே மும்பையில் புறநகர் ரயில்கள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

உச்சிக்கு ஏறிய தாத்தாவின் காமம்.. 10 வயது பிஞ்சு.. தொடர்ந்து 3 முறை.. கொந்தளிப்பில் மதுரை.. கைதுஉச்சிக்கு ஏறிய தாத்தாவின் காமம்.. 10 வயது பிஞ்சு.. தொடர்ந்து 3 முறை.. கொந்தளிப்பில் மதுரை.. கைது

மேற்கு ரயில்வே வெளியிட்ட ட்வீட்டில், இந்த ரயில்களில் பொது பயணிகள் பயணிக்க அனுமதி இல்லை என்றும், ரயில் நிலையங்களில் அவசர தேவைக்காக வரும் கூட மக்கள் கூட்டமாக வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ரயில்வே துறை வெளியிட்ட ட்வீட் பதில், குறிப்பிட்ட புறநகர் சேவைகள் ஜூன் 15 திங்கள் கிழமை முதல் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட அத்தியாவசிய ஊழியர்களின் இயக்கத்திற்கு மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை ஏற்று, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்காக சில வழித்தடங்களில் இன்று முதல் புறநகர் ரயில்களை இயக்கி வருகிறது ரயில்வே.

English summary
Some local trains in Mumbai have resumed from today only for those engaged in essential services amid the coronavirus pandemic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X