மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுனை நீட்டித்தால்.. பொருளாதார பாதிப்பு மட்டுமல்ல.. வேறு ஒரு ஆபத்து இருக்கிறது- ஆனந்த் மஹிந்திரா

Google Oneindia Tamil News

மும்பை: லாக்டவுன் நீட்டிப்புகள் பொருளாதார ரீதியாக பேரழிவு மட்டுமல்ல, மற்றொரு மருத்துவ நெருக்கடியையும் உருவாக்குகின்றன என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாலிசியை உருவாக்குபவர்களுக்கு, எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருக்கும் என்பதை ஒப்புக் கொண்டாலும், லாக்டவுன் நீட்டிப்பு என்ற தேர்வு, நாட்டுக்கு உதவாது என்றார் ஆனந்த் மஹிந்திரா.

"லாக்டவுன் நீட்டிப்புகள் பொருளாதார ரீதியாக மட்டும் பேரழிவு தரக்கூடியவை அல்ல, மற்றொரு மருத்துவ நெருக்கடியை உருவாக்குபவை" என்று ஆனந்த் மஹிந்திரா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தீவிரம் காட்டாதது ஏன்.. பொதுமக்கள் கேள்வி.. கொரோனா பிடியில் சென்னை! ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தீவிரம் காட்டாதது ஏன்.. பொதுமக்கள் கேள்வி.. கொரோனா பிடியில் சென்னை!

பிற நோயாளிகள்

"லாக்டவுன் ஆபத்தான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும். கொரோனா அல்லாத பிற நோயாளிகளை நாம் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் பெரும் ஆபத்தும் இதில் உள்ளது" என்று வெளியான ஒரு கட்டுரையை ஆனந்த் தனது கருத்துக்கு சப்போர்ட்டாக குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ வசதி தேவை

கொரோனா வைரஸ் கேஸ்கள் தொடர்ந்து உயரும். ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் மருத்துவமனை படுக்கைகளை விரைவாக அதிகரிப்பதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். ராணுவத்தில் இதில் பெரும் நிபுணத்துவம் உள்ளது. இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.

லாக்டவுன் தேவையில்லை

லாக்டவுன் தேவையில்லை

மார்ச் 22ம் தேதி நாடு தழுவிய லாக்டவுனை, அரசு, அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா வைரஸ் பரவல் 3வது கட்டத்தை எட்டியிருக்கக்கூடும் என்ற அறிக்கைகள் குறித்து ஆனந்த் கவலை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா தொழில் வளம் மிக்க மாநிலம். ஆனால், கொரோனா பாதிப்பும் அங்கு அதிகமாக உள்ளது. எனவே, லாக்டவுனை நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்று, அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்தார்.

தொழில்கள்

தொழில்கள்

இந்த நிலையில்தான், லாக்டவுன் நீட்டிப்பு தேவையில்லை என்று, தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால், தொழில்களை துவங்கினாலும் போதிய ஊழியர்கள் வருகை இல்லை என்பது பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பிரச்சினையாக உள்ளது. பயம் மற்றும் போதிய போக்குவரத்து வசதி இல்லாதது ஒரு காரணம். ஸ்ரீபெரும்புதூரில் இப்படி ஒரு ஆலையை துவங்கி, கொரோனா பாதிப்பு பரவியதும் அது மூடப்பட்டுள்ளது.

English summary
Anand Mahindra, president of Mahindra Group, said the Lockdown extensions are not only economically devastating but also leads to another medical crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X