லாட்ஜில் "மாறிய" ஜோடி.. அவர் மனைவி + இவர் கணவன்.. கூடவே 2 பேர்.. ரூமை திறந்தால்.. அலறி ஓடிய ஊழியர்கள்
மும்பை: லாட்ஜில் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனால் 4 பிணங்கள் இருந்திருக்கின்றன.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் உள்ளது அலிபாக் என்ற பகுதி... இங்கு தனியார் கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த 11ம் தேதி ஒரு குடும்பம் வந்து ரூம் எடுத்து தங்கியிருந்தனர்.. அந்த நபருக்கு 30 வயதிருக்கும்.. அந்த பெண்ணுக்கு 25 வயதிருக்கும்.. 2 குழந்தைகளுடன் வந்திருந்தனர்.. சிறுவனுக்கு 3 வயது, சிறுமிக்கு 5 வயதாகிறது.. ஒரே ரூமில் எல்லாருமே தங்கியிருந்தனர்.
மனைவியுடன் கணவன் வல்லுறவு கொள்வது தவறா? நீதிபதிகள் தனி தனி தீர்ப்பு! உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை

லாட்ஜ்
ஆனால், ரூம் புக் செய்துவிட்டு, உள்ளே போனதோடு சரி.. மறுநாள் வெகுநேரமாக இவர்கள் யாருமே வெளியே வரவில்லை.. இதனால், சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், அந்த ரூம் கதவை தட்டி பார்த்திருக்கிறார்கள்... எந்த பதிலுமே வரவில்லை.. இதனால் மேலும் சந்தேகம் அடைந்து, மாற்று சாவி மூலம், ரூமை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது 4 பேருமே சடலமாக கிடந்தனர்.. 2 குழந்தைகள் படுக்கையில் உயிரிழந்து கிடந்தனர்.. இவர்கள் 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்..

சடலங்கள்
இதை பார்த்ததுமே லாட்ஜ் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. உடனடியாக அலிபாக் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 4 பேரின் சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையும் துவக்கினர்..

தற்கொலை
குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, கடைசியாக இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது... இவர்கள் வெளியூர் என்பதால் இவர்களை பற்றின விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.. தற்கொலைக்கு முன்பும் கடிதம் எதுவும் இவர்கள் எழுதி வைக்கவும் இல்லை.

துப்பு - க்ளூ
அதனால், உடனடி க்ளூ இந்த வழக்கில் கிடைக்காமல் திணறினார்கள்.. இதுபற்றி விவரங்களை சேகரித்து கொண்டிருந்தபோதுதான், புனே அருகே உள்ள சிக்ராப்பூர் ஸ்டேஷனில், ஒருவர் தன்னுடைய மனைவியை காணாமல் போலீசில் புகார் தந்தது தெரியவந்தது.. அதேபோல, இதே ஸ்டேஷனில், தன்னுடைய கணவரை காணாமல், மனைவி ஒருவர் புகார் தந்திருப்பதும் தெரியவந்தது... இதுதான் போலீசுக்கு கிடைத்த முதல் துப்பு.

போட்டோக்கள்
காணாமல் போன இருவருமே ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், விசாரணை துரிதமானது.. மேலும், இறந்துபோன அந்த குழந்தைகளின் போட்டோக்களை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் அனைத்து உண்மையும் வெளியே வந்தது.. இறந்துபோன பெண்ணின் பெயர் இங்லே என்பதாகும்.. இறந்து குழந்தைகள் இருவருமே, இந்த பெண்ணின் குழந்தைகள்தான்..

கள்ள ஜோடி
விஷம் கொடுத்து பெற்ற தாயே கொன்றுள்ளார்.. ஆனால், ரூமில் வந்து தங்கிய அந்த நபர், இப்பெண்ணின் கணவன் இல்லையாம்.. அவர் கள்ளக்காதலனாம்.. பெயர் குணால் கெய்க்வாட் என்பது தெரிய வந்திருக்கிறது. கள்ளக்காதல் ஜோடிகள் எதற்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்த காரணம் தெரியவில்லை... இவர்களின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு இருந்ததா? அதனால்தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்களா? என்று தெரியவில்லை.

பரபரப்பு
ஆனால், மனைவியை காணோம் என்று கணவனும், கணவனை காணோம் என்று மனைவியும் போலீசில் தனித்தனியாக புகார் தந்ததை வைத்துதான், போலீசார் இந்த வழக்கின் முடிச்சை அவிழ்த்துள்ளனர்.. தொடர்ந்து விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.