மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயிலிலிருந்து கையால் அள்ளம் அளவு தண்ணீர்.. "மகாலட்சுமி"யுடன் சேர்ந்து தவித்த 700 பயணிகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பையில் கனமழையால் மகாலட்சுமி எக்ஸ்பிரஸில் 700 பயணிகள் தவிப்பு-வீடியோ

    மும்பை: மும்பையில் கனமழையால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மகாலட்சுமி எக்ஸ்பிரஸில் 700 பயணிகள் தவித்து வந்த பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.

    இதனால் மகாராஷ்டிர மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளித்தது. இந்த நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுத்த மழை தற்போது மீண்டும் அதன் அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளது.

    நேற்று மாலை முதல் மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. விமானங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    ஆரஞ்ச் அலர்ட்

    ஆரஞ்ச் அலர்ட்

    இந்த நிலையில் இன்றைய தினம் ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர். 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தண்டவாளத்தில் தண்ணீர்

    தண்டவாளத்தில் தண்ணீர்

    இந்த நிலையில் பாத்லாபூரிலிருந்து வாங்கானி செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    பயணிகள்

    மேலும் ரயிலில் இருந்து கையால் துழவும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ரயிலை விட்டு வெளியேற முடியாமல் 700 பயணிகள் தவித்து வருகின்றனர்.

    தண்ணீர்

    தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பிஸ்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை பயணிகளுக்கு அளித்துள்ளனர். இதையடுத்து 700 பயணிகளையும் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

    மீட்கப்பட்ட 700 பேர்

    மீட்கப்பட்ட 700 பேர்

    அப்போது உல்லாஸ் ஆற்றால் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் அங்கு படகுகள் மூலம் 500-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்டனர். மேலும் உள்ள பயணிகளை விரைவில் மீட்போம் என ரயில்வே துறை, மாநில அரசு, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு துறை ஆகியன தெரிவித்துள்ளன.

    English summary
    Mahalaxmi Express held up between Badlapur and Wangani with around 700 passengers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X