மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு.. ஆளுநருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்த சிவசேனா

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க முடிவு ? | NCP-Congress Concede CM Post to Shiv Sena.

    மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று அறிவித்த நிலையில், திடீரென அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரத்தில் 105 இடங்களில் பாஜகவும் 56 இடங்களில் சிவசேனாவும், 54 இடங்களில் என்சிபியும் 44 இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றது. எனினும் பெரும்பான்மைக்கு தேவைப்படும் 145 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. கூட்டணி கட்சியான பாஜக- சிவசேனா ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

    Maharasatra: New alliance to meet Governor Koshyari

    இதையடுத்து காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தது. ஆனால் அது முடியாமல் போனது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் அக்கட்சியோ முடியாது என கூறிவிட்டது.

    முரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணைமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை

    இதையடுத்து சிவசேனாவை அழைத்த நிலையில் அக்கட்சி ஆதரவு கடிதம் கொடுக்க கால அவகாசம் கேட்டு அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார். என்சிபியை அழைத்த போது அக்கட்சியும் கால அவகாசம் கோரிய நிலையில் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    6 மாதங்களுக்கு எந்த கட்சியாவது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் என்சிபி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா இடையே உடன்பாடு எட்டியதாக கூறப்பட்டது. இதையடுத்து அக்கூட்டணியினர் இன்று மாலை 3 மணிக்கு ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக செய்திகள் வெளியாகின.

    சிவசேனா செய்தித் தொடர்பாளர் நவாப் அலியும் இதை உறுதி செய்தார். ஆனால், மாலை 4 மணியளவில், ஒரு செய்தி சிவசேனா வட்டாரத்தில் வெளியானது. அதாவது, ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரவில்லை என்பதுதான் அந்த தகவல். காங்கிரஸ், என்.சி.பி ஆகிய கட்சிகளுடன் குறைந்தப்பட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுவதால், ஆட்சியமைக்க சிவசேனா உரிமை கோரவில்லை என கூறப்படுகிறது.

    English summary
    ShivSena- NCP- Congress- alliance meets Governor Koshyari to claim to form government in Maharastra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X