மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அஜித் பவாருக்கு 22 என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு? சிவசேனாவிலும் பிளவா?

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கை கோர்த்த என்சிபியின் அஜித் பவாருக்கு 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சிவசேனா எம்.எல்.ஏக்களும் பாஜகவின் புதிய அரசுக்கு ஆதரவு தரக் கூடும் என கூறப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பாஜக- அஜித்பவாரின் என்சிபி பிரிவு ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றிருக்கிறார். அஜித்பவார், துணை முதல்வராகி உள்ளார்.

    Maharashtra: 22 NCP MLAs to support Ajit Pawar?

    ஆனால் அஜித்பவார் மேற்கொண்டது தனிப்பட்ட முடிவு; என்சிபியின் முடிவு அல்ல என திட்டவட்டமாக கூறியுள்ளார் சரத்பவார். இதனால் என்சிபியில் பிளவு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

    தற்போதைய நிலையில் அஜித் பவாருக்கு 22 என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிவசேனாவை சேர்ந்த சில எம்.எல்.ஏக்களும் இப்புதிய அரசுக்கு ஆதரவு தர இருப்பதாக கூறப்படுகிறது.

    பாஜகவுடன் அஜித்பவார் கை கோர்த்தது என்சிபியின் முடிவு அல்ல- சரத்பவார் திட்டவட்டம்பாஜகவுடன் அஜித்பவார் கை கோர்த்தது என்சிபியின் முடிவு அல்ல- சரத்பவார் திட்டவட்டம்

    இதனால் புதிய பாஜக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்குமா? எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு? என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

    English summary
    According to the sources 22 NCP MLAs may support to Ajith Pawar in Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X