மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

80% வேலைவாய்ப்பு மண்ணின் மைந்தர்களுக்குத்தான்.. நாம் தமிழர் போல அதிரடி காட்டும் சிவசேனா.. மாஸ்!

மகாராஷ்டிராவில் 80% வேலைவாய்ப்பு மகாராஷ்டிரா மாநில இளைஞர்களுக்கே வழங்கப்படும் என்று சிவசேனா சட்டம் கொண்டு வர இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!

    மும்பை: மகாராஷ்டிராவில் 80% வேலைவாய்ப்பு மகாராஷ்டிரா மாநில இளைஞர்களுக்கே வழங்கப்படும் என்று சிவசேனா சட்டம் கொண்டு வர இருக்கிறது. தமிழகத்திலும் நாம் தமிழர் கட்சி இதேபோல் சட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்துள்ளது.

    இன்னும் சற்று நேரத்தில் சிவாஜி பார்க்கில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்களாக அங்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் மேடை இதற்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு சுமார் 2000 போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    மசோதா எப்படி

    மசோதா எப்படி

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக 80% உள்ளூர் மற்றும் மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட உள்ளது. இதற்காக சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. விரைவில் இது சட்டமாக வர உள்ளது.

    இனிமேல் எப்படி

    இனிமேல் எப்படி

    அதன்படி இனிமேல் மகாராஷ்டிராவில் மராட்டிய மக்களுக்குத்தான் அரசு மற்றும் தனியார் பணிகள் முன்னுரிமை அளிக்கப்படும். மராட்டிய மொழிக்குத்தான் அங்கு தேர்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    சிவசேனா எப்படி

    சிவசேனா எப்படி

    பொதுவாக சிவசேனா மாநில உரிமை முன்னுரிமை அளிக்கும் காட்சியாகும். சிவசேனா உருவாக்கப்பட்டதே மாநில உரிமைகளை மையமாக வைத்துதான். அவர்களின் கொள்கையே மாநில சுயாட்சி, மொழி கொள்கை மட்டும்தான். தற்போது அதற்கு ஏற்றபடி அந்த செயல்பட தொடங்கி உள்ளது.

    இன்னொரு பக்கம்

    இன்னொரு பக்கம்

    தமிழகத்திலும் நாம் தமிழர் கட்சி இதேபோல்தான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும், நீங்கள் வாழ வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஆனால் இங்கு நாங்கள்தான் ஆள வேண்டும் என்று நாம் தமிழர் உறுதியாக இருக்கிறது.

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திராவிலும் இதேபோல் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம் நாம் தமிழர் கொள்கை நாடு முழுக்க பல மாநிலங்களில் பரவி வருவதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்

    English summary
    Maharashtra: 80% works for native people, Sena government to follow NTK from Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X