மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: வொர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வேட்புமனு தாக்கல்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வொர்லி தொகுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றன. தென்மத்திய மும்பை வொர்லி தொகுதியில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

Maharashtra Assembly Election 2019: Aditya Thackeray Files Nomination

பால்தாக்கரே காலத்தில் இருந்தே அவரது குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது முதல் முறையாக ஆதித்யா தாக்கரே களமிறக்கப்பட்டிருக்கிறார்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக ஆதரவாளர்களுடன் பிரமாண்ட ஊர்வலத்தை நடத்தினார் ஆதித்யா தாக்கரே. வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருந்தோம்.

ஆனால் காலங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என ஆதித்யா தாக்கரே விரும்புகிறார். அதனால்தான் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றார்.

English summary
Shiv Sena youth wing leader Aaditya Thackeray has filed his nomination from the Worli Assembly constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X