மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. மிகவும் மந்தமாக நடந்த தேர்தல்.. 55.33% வாக்குகள் பதிவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra, Haryana Assembly, and 51 by-poll seats go for voting today

    மும்பை: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் இன்று நடந்தது. இந்த தேர்தல் காலையில் இருந்து மாலை வரை மிகவும் மந்தமாக நடந்தது.

    இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. இதில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களாக மகாராஷ்டிரா தேர்தல் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. பங்கு வர்த்தகம், பாலிவுட் என்று பல முக்கிய விஷயங்களின் தலைநகராக மும்பை விளங்கி வருகிறது.

    மும்பை அரசியல்

    மும்பை அரசியல்

    மகாராஷ்டிரா வடஇந்திய அரசியலில் எப்போதும் முடிவுகளை நிர்ணயிக்கும் மாநிலமாக விளங்கி வருகிறது. அங்கு பாஜக மிகவும் வலுவான கட்சியாக இருக்கிறது. பாஜகவிற்கு அடுத்தபடியாக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளும் வலுவான கட்சியாக இருக்கிறது.

    யார் ஆட்சி

    யார் ஆட்சி

    தற்போது மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா ஆட்சியில் உள்ளது. பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலையும் சந்திக்கிறது.மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் உள்ளது. இதில் 124-ல் சிவசேனா போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

    கூட்டணி கட்சி

    கூட்டணி கட்சி

    அதேபோல் இன்னொருபுறம் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் கட்சி 147 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் போட்டியிடுகிறது.மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா, பகுஜன் சமாஜ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகிறது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    4,28,43,635 பெண்கள் உட்பட 8,98,39,600 பேர் இந்த தேர்தலில் மகாராஷ்டிராவில் வாக்களிக்கிறார். மொத்தம் 96,661 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    தேர்தல் பணிகள்

    தேர்தல் பணிகள்

    6.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியை செய்தனர். 1,85,000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தேர்தல் நடந்தது.

    மிக மோசமாக

    மிக மோசமாக

    காலையில் இருந்து மாலை வரை பெரிய அளவில் வாக்களிக்க வரவில்லை. காலை 9 மணி அளவில் இங்கு 1.5% மட்டுமே வாக்குகள் பதிவானது. மொத்தமாக 6 மணி அளவில் இங்கு 55.33% வாக்குகள் மட்டுமே பதிவானது.

    English summary
    Maharashtra assembly elections 2019: 288 seats all over the state will see the voting today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X