மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உத்தவ் தாக்கரேவை எதிர்கொள்ள பாஜக இறக்கும் கடைசி அஸ்திரம்.. ராஜ் தாக்கரேவுடன் நெருக்கமாகும் அமித் ஷா

மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரேவை வைத்து அரசியல் மாற்றங்களை செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவை பாஜக விட்டு கொடுக்க என்ன காரணம்?

    மும்பை: மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரேவை வைத்து அரசியல் மாற்றங்களை செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது. அவரின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவிற்கு பாஜக வரும் காலங்களில் ஆதரவு தரும் என்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து வந்தவர்களில் உத்தவ் தாக்கரே மட்டும்தான் அரசியல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இவரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் சிவசேனா உள்ளது. அப்பாவின் மறைவிற்கு பிறகு இவர்தான் கட்சியை வழி நடத்தி வருகிறார்.

    பால் தாக்கரேவிற்கு எவ்வளவு மரியாதை வழங்கப்பட்டதோ அதே மரியாதையை பாஜக உத்தவ் தாக்கரேவிற்கும் வழங்கி வந்தது. ஆனால் தற்போது பாஜக சிவசேனா இடையிலான கூட்டணி மொத்தமாக முறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    90ஸ் கிட் பேச்சை கேட்டு அசிங்கப்பட்ட சிவசேனா.. மகாராஷ்டிராவில் தனித்துவிடப்பட்டது.. இந்த நிலையா!90ஸ் கிட் பேச்சை கேட்டு அசிங்கப்பட்ட சிவசேனா.. மகாராஷ்டிராவில் தனித்துவிடப்பட்டது.. இந்த நிலையா!

    பாஜக கோபம்

    பாஜக கோபம்

    சிவசேனாவின் பிடிவாதத்தால் பாஜக அக்கட்சி மீது பெரும் கோபத்தில் இருக்கிறது. சிவசேனா மீது இருக்கும் கோபத்தை காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக வெளிக்காட்டினார். பாஜகவை சிவசேனா விமர்சிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் வெளிப்படையாக கூறினார்.

    மொத்தமாக முறிவு

    மொத்தமாக முறிவு

    தற்போது இவர்கள் இருவருக்கும் இடையிலான கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது. அதேபோல் சிவசேனாவும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டது. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனாவை கட்டுப்படுத்த பாஜக புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    அதன்படி மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரேவை வைத்து அரசியல் மாற்றங்களை செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது. ராஜ் தாக்கரேவிற்கும், உத்தவ் தாக்கரேவிற்கும் இடையில் உறவு அவ்வளவு சரியாக இல்லை. இதனால் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவிற்கு பாஜக வரும் காலங்களில் ஆதரவு தரும் என்கிறார்கள்.

    சிக்கல்

    சிக்கல்

    ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா அவ்வளவு பிரபலமான கட்சி கிடையாது. ஆனால் பாஜக நினைத்தால் சிவசேனாவிற்கு எதிராக ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவை வளர்த்து விட முடியும். ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவிற்கு சிவசேனா வாக்குகளை அப்படியே மடை மாற்றிவிட முடியும்.

    சந்திப்பார்

    சந்திப்பார்

    இதற்கான நடவடிக்கைகள் விரைவில் நடக்கும் என்கிறார்கள். அமித் ஷாவும் ராஜ் தாக்கரேவும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்கிறார்கள். மகாராஷ்டிராவில் அடுத்த தேர்தல் வந்தால் சிவசேனா தனியாக நிற்கும். அதனால் பாஜக ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவுடன் கூட்டணி வைத்து நிற்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Maharashtra: BJP may go for MNNS Raj Thackeray, after their clash with Uddhav Thackeray.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X