மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகா. பாஜகவுக்கு ஷாக்.. மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகினார்- என்சிபியில் இணைகிறார்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்சே அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் நாளை மறுநாள் ஏக்நாத் கட்சே இணைய உள்ளார்.

மகாராஷ்டிரா பாஜகவில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. 2016-ம் ஆண்டு ஊழல் புகார், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பு ஆகிய காரணங்களால் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.

Maharashtra BJP Senior leader Eknath Khadse resigns from party

இதன்பின்னர் பாஜக மேலிடம் அவரை முழுவதுமாக ஒதுக்கி வைத்திருந்தது. கடந்த சட்டசபை தேர்தலின் போதே ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகுவார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் பாஜகவில் தொடர்ந்து நீடித்து வந்தார் ஏக்நாத் கட்சே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏக்நாத் கட்சே கட்சி தாவப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனை தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் மறுத்து வந்தனர். ஏக்நாத் கட்சே, பாஜகவிலேயே நீடிப்பதாகவும் விளக்கம் அளித்து வந்தனர்.

நில முறைகேடு, தாவூத் தொடர்பு.. மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் கட்சே ராஜினாமா!நில முறைகேடு, தாவூத் தொடர்பு.. மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் கட்சே ராஜினாமா!

இதனிடையே தாம் பாஜகவில் இருந்து விலகுவதாக மகாராஷ்டிரா மாநில கட்சித் தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு ஏக்நாத் கட்சே கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமையன்று ஏக்நாத் கட்சே இணைய இருப்பதாகவும் அந்த கட்சி அறிவித்திருக்கிறது.

English summary
Maharashtra BJP Senior leader Eknath Khadse sends resignation to BJP's Maharashtra president Chandrakant Patil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X