மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்குப் பின் அமைச்சரவையில் முஸ்லிம்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அமைச்சரவையில் முஸ்லிம்கள்!

    மும்பை: மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் 3 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் 1960-ம் ஆண்டு முதல் அமைச்சரவைகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வந்தது. மாநில மக்கள் தொகையில் 11.5% முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

    Maharashtra Cabinet Expansion: Muslims get ministers after Five Years

    இதனால் அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1960-ம் ஆண்டு முதல் 2014 வரை 64 முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்களில் 31 பேர் கேபினட் அமைச்சர்கள்; 33 பேர் துணை அமைச்சர்கள். 1995-ல் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த போது கூட ஷபீர் ஷேக் என்கிற முஸ்லிம் அமைச்சராக்கப்பட்டார்.

    ஆனால் 2014-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் முதல் முறையாக முஸ்லிம்களுக்கான அமைச்சரவை பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. 2014 சட்டசபை தேர்தலில் 9 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போதைய தேர்தலில் 10 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களாகி உள்ளனர்.

    2019ல் புது ரூபம் எடுத்த போராட்டக் களம்.. கோலம் போட்டு அதிர வைத்த மக்கள்..! 2019ல் புது ரூபம் எடுத்த போராட்டக் களம்.. கோலம் போட்டு அதிர வைத்த மக்கள்..!

    இம்முறை 4 முஸ்லிம்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் கேபினட் அமைச்சர்கள்; ஒருவர் துணை அமைச்சர். இதேபோல் பிற சிறுபான்மை மதத்தினரும் மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம் வேண்டும் என்கிற குரலை வெளிப்படுத்துகின்றனர்.

    1995-ம் ஆண்டு முதல் பார்சி சமூகத்தினருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. 1978-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்கிற குமுறலும் மகாராஷ்டிராவில் இருக்கிறது.

    English summary
    In Maharashtra After 2014 Muslims get ministerial berths in the State Cabinet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X