மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முட்டுக்கட்டை போடும் சிவசேனா.. நாளை அமித் ஷாவை சந்திக்கிறார் மகாராஷ்டிரா முதல்வர்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாளை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். அப்போது பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இடையிலான அதிகாரத்தை பங்கிடுவதில் உள்ள மோதல் குறித்து ஆலோசனை நடத்தி பிரச்னைக்கு முடிவு கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி மீண்டும் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் வழக்கம் போல் பாஜகவுக்கு முதல்வர் பதவியை இந்த முறை விட்டுத்தர முடியாது என சிவசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிவசேனா அடம்

சிவசேனா அடம்

50க்கு 50 என்ற அடிப்படையில் அமைச்சரவையில் இடம் முதல்வர் பதவியை இரண்டரை வருடம் தங்களுக்கு தர வேண்டும் என்றும் அப்போது தான் ஆதரவு என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது.

நெருக்கடியில் பாஜக

நெருக்கடியில் பாஜக

இதனால் கடந்த 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியும் இன்னமும் பாஜகவால் ஆட்சியை அமைக்க முடியாத நிலை உள்ளது. வரும் நவம்பர் 9ம் தேதியுடன் பட்னாவிஸ் அரசின் பதவி காலம் நிறைவடைகிறது. அதற்குள் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டுவிடும்.

மழை பாதிப்பு நிவாரணம்

மழை பாதிப்பு நிவாரணம்

இப்படியான நெருக்கடியா ஒரு சூழலில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்திக்கிறார். அப்போது மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு தொடர்பாக விவாதிக்கிறார். மகாராஷ்டிராவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ .10,000 கோடி நிதியை மாநில அரசு அறிவித்தாலும், கூட்டணி கட்சியான சிவசேனா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் என்.சி.பி ஆகியவை சேதமடைந்த பல லட்சம் ஹெக்டேர் பயிர்களைக் கருத்தில் கொண்டு இது போதாது என்று கூறியிருந்தன. எனவே இந்த சந்திப்பில் விவசாயிகள் நலன் சார்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

முடிவுக்கு வருமா

முடிவுக்கு வருமா

முடிவுக்கு வருமா

English summary
Maharashtra Chief Minister Devendra Fadnavis will head to Delhi on Monday to meet Union Home Minister Amit Shah amid the power tussle between allies BJP and Shiv Sena.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X