மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா! நம்பிக்கை வாக்கெடுப்பு முன்பே பதவி துறப்பதாக அறிவிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய நிலையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க டெல்லி உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Recommended Video

    Maharashtra முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக Uddhav Thackeray அறிவிப்பு *Politics

    மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்தன. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.

    இந்நிலையில் தான் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி வைத்திருப்பதை சிவசேனாவின் பல எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

    நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அனுமதிக்கனும்! சிறையிலுள்ள மகாராஷ்டிரா அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அனுமதிக்கனும்! சிறையிலுள்ள மகாராஷ்டிரா அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

    ஓட்டலில் அதிருப்தி எம்எல்ஏக்கள்

    ஓட்டலில் அதிருப்தி எம்எல்ஏக்கள்

    இந்நிலையில் தான் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மும்பையை விட்டு வெளியேறினர். தற்போது அவர்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்கினர். தற்போது கோவா ஓட்டலில் உள்ளனர்.

    பெரும்பான்மையை நிரூபிக்க கூறிய ஆளுநர்

    பெரும்பான்மையை நிரூபிக்க கூறிய ஆளுநர்

    சிவசேனா கட்சிக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 6 பேரும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக வெறும் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை மகாராஷ்டிரா துணை சபாநாயகர் வழங்கினார். இதற்கு ஜூலை 11 வரை உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே பெரும்பான்மையை நாளை அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.

    உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

    உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

    இதனை எதிர்த்து சிவசேனா கொறாடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது'' என பரபரப்பான உத்தரவை பிறப்பித்தது. மேலு

    ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே

    ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே

    இந்த உத்தரவால் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் மகாவிகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் பேசி வருகிறார். அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் நான் பால்தாக்கரேவின் கனனை நிறைவேற்றி இருக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், மாநில மக்களுக்கும், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பால்தாக்கரேவின் மகனை நீங்கள் வீழ்த்து உள்ளீர்கள். நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன்'' என்றார்.

    English summary
    Maharashtra CM Uddhav Thackeray announced that "I am resigning as the Chief Minister,"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X