• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

மகா. கூட்டணி அரசுக்கு வேட்டு வைக்கிறதா காங்.? இனி தனித்தே போட்டி என அறிவித்ததால் ஆட்சி கவிழுமா?

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் இனி உள்ளாட்சித் தேர்தல், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் நானா படோல் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழக் கூடுமோ? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபைக்கு 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சிவசேனா, பாஜக ஆட்சி அமைக்கக் கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் சிவசேனா கேட்டதில் பாஜகவுக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் புதிய திருப்பமாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாஜக vs ட்விட்டர்.. அப்போது பிரசார பீரங்கி, இப்போது மோதலின் உச்சம்.. ஏன் தெரியுமா? விளக்கும் சிவசேனாபாஜக vs ட்விட்டர்.. அப்போது பிரசார பீரங்கி, இப்போது மோதலின் உச்சம்.. ஏன் தெரியுமா? விளக்கும் சிவசேனா

அமித்ஷா- சரத் பவார் ஆலோசனை

அமித்ஷா- சரத் பவார் ஆலோசனை

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பூடகமான நடவடிக்கைககள் ஒவ்வொரு முறையும் கேள்வியை எழுப்பி கொண்டே இருக்கிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளித்த அமித்ஷா, எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்த முடியாது என்று சொல்ல சலசலப்பு ஏற்பட்டது.

பாஜகவின் வேட்பாளர்?

பாஜகவின் வேட்பாளர்?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சரத்பவாரை வேட்பாளராக முன்னிறுத்தக் கூடுமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. இதனையடுத்து சரத்பவாரை திடீரென பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். இதனால் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் என்ன செய்கிறது என்கிற குழப்பம் உருவானது.

சரத் பவார்- பிகே சந்திப்பு

சரத் பவார்- பிகே சந்திப்பு

இன்னொரு பக்கம், சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி ஆட்சி குறித்து ஆளுக்கொரு விமர்சனங்களை முன்வைப்பதும் பின்னர் சமாதனமாகப் போவதுமான சூழ்நிலையும் நீடித்து வந்தது. இந்த நிலையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் சரத்பவார் 3 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தமிழகம், மேற்கு வங்க தேர்தல்களில் மேற்கொள்ளப்பட்ட வியூகங்கள், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் விவாதித்திருக்கின்றனர்.

காங்கிரஸுக்கான இடங்கள்

காங்கிரஸுக்கான இடங்கள்

குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அணியில் குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து சரத்பவார் கேட்டிருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடம் ஒதுக்கியதால் திமுகதான் ஆதாயம் அடைந்ததாக பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டியும் இருந்தார். இதனால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கழற்றிவிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்திருந்தன.

தனித்தே போட்டி

தனித்தே போட்டி

இந்த பின்னணியில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், இனி வரும் அத்தனை தேர்தல்களிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்; காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் மீண்டும் தனித்தே ஆட்சி அமைக்கும் என கூறியிருப்பதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக், நானோ படோல் மாநில முதல்வராக ஆசைப்படுகிறார். அவருக்கு வாழ்த்துகல் என கிண்டலாக கூறியுள்ளார். இதேபோல் சிவசேனாவும் அதிருப்தியை மேலோட்டமாக வெளிப்படுத்தி உள்ளது.

ஆட்சி கவிழுமா?

ஆட்சி கவிழுமா?

இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசின் எதிர்காலம் மேலும் கேள்விக்குறியாகி உள்ளது. இத்தகைய குழப்பங்களால் இந்த கூட்டணி அரசு முழுமையாக ஆட்சி காலத்தை கடத்திவிடுமா? என்கிற சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன.

English summary
Maharashtra Congress. Chief Nana Patole said that his party will fight alone in upcoming all Polls in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X