மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்னாள் பாஜக கையை சபாநாயகராக்கும் காங்கிரஸ்.. அதிரடி.. மகாராஷ்டிராவில் மாஸ் பிளான்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவின் சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இன்று உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. இன்று காலை சட்டசபை கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். அம்மாநில சட்டசபை தற்காலிக சபாநாயகராக என்சிபி எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்டம் இல்லை.. அபிஜித் பானர்ஜி எச்சரித்தது போலவே நடந்தது.. தொடர்ந்து சரியும் இந்தியாவின் ஜிடிபி!அதிர்ஷ்டம் இல்லை.. அபிஜித் பானர்ஜி எச்சரித்தது போலவே நடந்தது.. தொடர்ந்து சரியும் இந்தியாவின் ஜிடிபி!

ஆனால் என்ன

ஆனால் என்ன

மகாராஷ்டிராவில் தற்காலிக சபாநாயகரான என்சிபி எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல்தான் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார். பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கோலம்ப்கருக்கு பதிலாக இவர் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் திலீப் வல்சே விரைவில் மாற்றப்படுவார்.

என்ன ஒப்பந்தம்

என்ன ஒப்பந்தம்

சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்படும். அதே சமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் கட்சி இன்னும் துணை முதல்வரை தேர்வு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

யார் வருகிறார்

யார் வருகிறார்

இந்த நிலையில் மகாராஷ்டிராவின் சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பல வருடங்களாக பாஜகவில் இவர் இருந்துள்ளார். 2014ல் இவர் பாஜகவில் இருந்து போட்டியிட்டு லோக்சபா எம்பியாக தேர்வானார்.

கட்சியில் இருந்து விலகினார்

கட்சியில் இருந்து விலகினார்

இதையடுத்து இவர் பாஜக கட்சியில் இருந்து விலகி கடந்த வருடம்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் இவர் லோக்சபா தேர்தலில் நிற்காமல் சட்டசபை தேர்தலில் நின்று சகோலி தொகுதியில் நின்று வென்றார். தற்போது இவர் சபாநாயகராக்கப்பட உள்ளார்.

பாஜகவை சமாளிக்க

பாஜகவை சமாளிக்க

கட்சியில் பல மூத்த உறுப்பினர்கள் இருந்து காங்கிரஸ் கட்சி இவருக்கு சபாநாயகர் வாய்ப்பு கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் பாஜகவை சமாளிக்கும் வகையில் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. இவருக்கு தேவேந்திர பட்னாவிஸுக்கும் சரியான உறவு இப்போது இல்லை.

இன்று மட்டுமின்றி நாளையும் அவை நடக்க உள்ளது. இந்த நிலையில் நாளை சபாநாயகர் தேர்தல் நடந்து நாளையே நிரந்தர சபாநாயகர் தேர்வாகி, அவர் தன்னுடைய பெரும்பான்மையை அவையில் நிரூபிப்பார்.

English summary
Maharashtra: Congress party leader Nana Patole to be elected as the new speaker tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X