மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவசேனாவுடன் சிக்கல் இல்லை- தேசியவாத காங்-க்குதான் முதல்வர் பதவி- காங். அடம்பிடிப்பதால் இழுபறி?

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)- சிவசேனா அரசில் முதல்வர் பதவியை என்சிபிக்குத்தான் தர வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்திருப்பதுதான் இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது.

பாஜகவுடனான பேச்சுவார்த்தைகளின் போது சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிவசேனா. இதனால் அந்த கூட்டணியே முறிந்தது.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது சிவசேனா. அப்போது சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் என்பதில் அக்கட்சி திட்டவட்டமாக இருந்தது.

சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்! சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்!

ஆளுநர் நிராகரிப்பு

ஆளுநர் நிராகரிப்பு

ஆனால் காங்கிரஸிடம் இருந்து ஆளுநர் கொடுத்த கெடு முடியும் வரை எந்த சிக்னலும் வரவில்லை. அதனால் மேலும் 3 நாட்கள் தருமாறு ஆளுநரிடம் அவகாசம் கேட்டது சிவசேனா.

கனவு நழுவியது

கனவு நழுவியது

ஆனால் ஆளுநர் இதனை நிராகரித்தார். இதனால் சிவசேனாவின் ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்தது. இதில் அக்கட்சி கடும் அதிர்ச்சி அடைந்தது.

காங். குழப்பம்

காங். குழப்பம்

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், 56 இடங்களை வென்ற சிவசேனா முதல்வர் பதவியில் உறுதியாக இருக்கிறது. சிவசேனாவை ஆதரிப்பதில் எங்கள் கட்சியில் எதிர்ப்பும் இருக்கிறது.

காங்கிரஸ் நிபந்தனை

காங்கிரஸ் நிபந்தனை

இத்தனை எதிர்ப்புகளையும் சமாளிக்கும் வகையில் 54 இடங்களில் வென்ற என்சிபிக்கு முதல்வர் பதவியை சிவசேனா விட்டுத்தர வேண்டும் என நிபந்தனை விதித்தோம். அதாவது என்சிபி ஆட்சிக்குத்தான் காங்கிரஸ் ஆதரவு தருகிறது; சிவசேனாவும் அதில் இடம்பெற்றிருக்கிறது என்கிற சூழ்நிலைதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.

விடை தெரியா கேள்விகள்

விடை தெரியா கேள்விகள்

இதற்கு சிவசேனா இதுவரை உடன்படவில்லை. இதனால்தான் இழுபறி நீடிக்கிறது என்கின்றன. முதல்வர் பதவி குறித்து என்சிபியும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் முதல்வர் பதவி என்சிபிக்குத்தான் என்பதில் காங்கிரஸ் திட்டவட்டமாக இருக்கிறது.

என்சிபி ஆட்சி அமைக்க ஆளுநர் கொடுத்த முடிய இன்னும் 8 மணிநேரம்தான் உள்ளது. அதற்குள் சிவசேனா விட்டுக் கொடுக்குமா? அல்லது சுழற்சி முறையிலாவது முதல்வர் பதவி கொடுங்கள் என இறங்கி வருமா? அதற்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமா? என்கிற கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டிய நிலை உள்ளது.

English summary
According to the sources, Congress party stands firm in the demand on the Maharashtra CM Post for its ally NCP only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X