மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1,230 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 23,401 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 1,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,401 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகும் போது நேற்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருந்தது.

Maharashtra Coronavirus Cases rise by 1,230 to 23,401

இதன்பின்னர் மகாராஷ்டிரா விவரங்கள் வெளியிடப்பட்டன. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் நேற்று மட்டும் 1,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 23,401 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் குஜராத் உள்ளது. இம்மாநிலத்தில் நேற்று மட்டும் 347 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,542 ஆக அதிகரித்தது.

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 80 ஆயிரத்தை தாண்டியது அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 80 ஆயிரத்தை தாண்டியது

3-வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 8,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் உள்ள டெல்லியில் 7,233 பேரும் 5-வது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 3,988 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.covid19india.org/ புள்ளி விவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70,768. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,294.

ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,152 எனவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2, 206 என்று தெரிவித்திருக்கிறது

English summary
Maharashtra recorded 1,230 new Coronaviruscases taking the count to 23,401.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X