மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியது- தமிழகம் தொடர்ந்து 2-வது இடம்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,015 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,434 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 45,422 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் கடும் நெருக்கடி- இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 9,000 பணியாளர்களை நீக்க முடிவுகொரோனாவால் கடும் நெருக்கடி- இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 9,000 பணியாளர்களை நீக்க முடிவு

மகா.வில் 40 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

மகா.வில் 40 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக உள்ளது. இம்மாநிலத்தில் கொரோனா தாக்கம் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் 2161 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,297 ஆக அதிகரித்தது. இங்கு கொரோனா மரணங்கள் 1,390 ஆகும்.

2-வது இடத்தில் தமிழகம்

2-வது இடத்தில் தமிழகம்

மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 5,882 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

749 மரணங்கள்

749 மரணங்கள்

3-வது இடத்தில் குஜராத் இருந்து வருகிறது. குஜராத்தில் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,539 ஆக உயர்ந்துள்ளது. இங்கு கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 749 ஆகவும் உள்ளது. டெல்லியில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. 11,088 பேர் கொரோனாவால் டெல்லியில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ராஜஸ்தன், ம.பி, உ.பி.

ராஜஸ்தன், ம.பி, உ.பி.

ராஜஸ்தானில் 6,015 பேரும் மத்திய பிரதேசத்தில் 5,735 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 5,175 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

English summary
According to the Reports, Maharashtra's Coronvirus Tally Surges Close to 40,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X