மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாருடனும் ஒட்டவில்லை.. அப்போதே எழுந்த சந்தேகம்.. அஜித் பவாரை வைத்து 'கேம்' ஆடினாரா சரத் பவார்?

மகாராஷ்டிரா அரசியலில் தன்னுடைய அண்ணன் மகன் அஜித் பவாரை வைத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காய் நகர்த்தினாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar resigns as Maharashtra deputy CM | துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார்

    மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் தன்னுடைய அண்ணன் மகன் அஜித் பவாரை வைத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காய் நகர்த்தினாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

    மகாராஷ்டிரா அரசியல் திருப்பங்கள் அரசியலுக்கு வல்லுனர்களுக்கே மூச்சு வர வைக்கிறது. அங்கு தற்போது துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வருகிறது. அதேபோல் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வருகிறது.

    நாளை மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் இன்று இவர்கள் இருவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

    மகாராஷ்டிராவும் 'டிட்டோ' கர்நாடகா மாதிரிதான்.. அவசரத்தில் பதவியேற்பது.. அப்புறம் ராஜினாமாமகாராஷ்டிராவும் 'டிட்டோ' கர்நாடகா மாதிரிதான்.. அவசரத்தில் பதவியேற்பது.. அப்புறம் ராஜினாமா

    சரத் பவார்

    சரத் பவார்

    இந்த நிலையில் இதெல்லாம் சரத் பவாரின் திட்டமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதாவது தேசியவாத காங்கிரஸ் பாஜகவிற்கு விரித்த வலையா என்று அரசியல் வல்லுநர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அஜித் பவாரை வைத்து மொத்தமாக பாஜகவை தேசியவாத காங்கிரஸ் ஏமாற்றுகிறதா? இதெல்லாம் பெரிய அரசியல் நாடகமா என்று விவாதங்கள் எழுந்துள்ளது.

    பாஜக அசிங்கம்

    பாஜக அசிங்கம்

    பாஜகவை ஆட்சி அமைக்க வைத்து அசிங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சரத் பவார் செய்தாரா? அண்ணன் மகன் அஜித் பவாரை வைத்து மொத்தமாக பாஜகவை சரத் பவார் ஏமாற்றுகிறாரா? என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. அஜித் பவாரின் செயல்பாடுகள் எல்லாம் இதே போன்ற சந்தேகத்தை வரவழைத்தது குறிப்பிடத்தக்கது.

    துணை முதல்வர்

    துணை முதல்வர்

    அஜித் பவார் துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டாலும், இன்னும் முழுமையாக பொறுப்பேற்கவில்லை. அவர் இன்னும் தன்னுடைய பணிகளை தொடங்கவில்லை. முக்கியமாக மும்பையில் தலைமைச்செயலகத்தில் உள்ள துணை முதல்வர் அலுவலகத்திற்கு கூட அவர் செல்லவில்லை.

    யாருடனும் பேசவில்லை

    யாருடனும் பேசவில்லை

    அதேபோல் பாஜக தலைவர்கள் யாருடனும் அஜித் பவார் பேச கூட இல்லை. பெரிதாக பாஜக உறுப்பினர்களுடன் அவர் நெருக்கம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். அப்போதே அஜித் பவாரின் செயல்பாடுகள் சந்தேகத்தை வரவழைத்தது. தற்போது அஜித் பவார் ராஜினாமா செய்ய போவதாக செய்திகள் வருகிறது.

    கடிதம் அளித்தார்

    கடிதம் அளித்தார்

    ஆம் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் பதவி விலகிவிட்டதாக செய்திகள் வருகிறது. இவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் அளித்துள்ளார் என்கிறார்கள். இதற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று அஜித் பவாரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்த கேள்விக்கு சரத் பவார் மழுப்பலான பதிலை அளித்தார்.

    அதிக வலு சேர்த்தது

    அதிக வலு சேர்த்தது

    அதில் அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நான் முடிவு எடுக்க முடியாது. அது தனிப்பட்ட நபர் எடுக்க கூடிய முடிவு இல்லை. அது கட்சி சார்பாக ஆலோசனை செய்து எடுக்க வேண்டிய முடிவு, என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆகவே இதெல்லாம் சரத் பவாரின் அரசியல் பிளானா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Maharashtra: Didi Sharad Pawar played a huge political game with Ajit Pawar against BJP?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X